“ராஜ ராஜ சோழன்” படத்தில் சிவாஜி கதாநாயகனாக நடிக்க சிவக்குமார் லட்சுமி, சீர்காழி கோவிந்தராஜன் உள்பட பலரும் அவருடன் இணைந்து இருந்தார்கள் படத்தில். சூட்டிங் காலை 7 மணிக்கு தொடங்கும் என்றால் சிவாஜியோ ஆறு மணிக்கே மேக்கப் போட்டுக்கொண்டு தயாராக இருப்பாராம்.
மற்ற நடிகர்களை எல்லாம் சிவாஜியே செட்டுக்கு வந்து விட்டார், நீங்கள் ஏன் இன்னும் ரெடியாகவில்லை என பட குழுவினர் சொல்லி அழைப்பார்களாம். சிவாஜி வந்த உடனே மிகுந்த பயத்தோடு நடந்து கொள்வார்களாம். அந்த அளவிற்கு அவரின் மீது அவர்களுக்கு மரியாதை இருந்ததாம்.

படப்பிடிப்பின் போது சிவாஜியிடம் பேசும்போதெல்லாம் லட்சுமி சிவாஜி சொல்லுவதை கேட்காமல் அதற்கு எதிர்வாதமாகவே பேசிக்கொண்டே இருப்பாராம்.
சிவாஜியை பார்த்து ‘அங்கிள்’ என அழைத்தபோது சிவாஜியே அவரை தடுத்து நான் கம்பீரமான ஒரு கெட்டப்பில் இருக்கிறேன் என்னை ‘அங்கிள்’ என்று அழைக்காதே “ராஜாதி ராஜா”, “அரசே” என கூப்பிடு என்பாராம்.
அதே போல ராணி குந்தவை வேடத்தில் இருக்கிறாய் நீ, அதற்கான கம்பீரத்தை எப்பொழுதுமே காட்ட வேண்டும் உட்காரும் போது கம்பீரமாக உட்கார். கூன் போட்டு அமரக்கூடாது. நீ போட்டிருக்கும் வேஷத்தின் உணர்வை உனது செயல்களே வெளிப்படுத்தும் என லட்சுமிக்கு அறிவுரைகளை கூறினாராம் சிவாஜி.
இதே போல எம்.ஜி.ஆரும் லட்சுமிக்கு பல அறிவுரைகளை கூறி இருந்திருக்கிறார். உடற்பயிற்சி செய் சொல்லிக்கொண்டே இருப்பாராம். இப்படி இவர்கள் இருவரும் லட்சுமிக்கு அறிவுரை கொடுத்து அவரின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய காரணமாக இருந்தவர்கள் என்று லட்சுமி ஒருமுறை தனது பேட்டியின் போது சொல்லி இருந்தார்.











