cinema news
சொன்னத கேட்கலேன்னா இப்படித்தான்…தேங்காய் சீனிவாசனை போன்னு விரட்டியடித்த எம்.ஜி.ஆர்..!
தேங்காய் சீனிவாசன் தமிழ் திரை உலகம் பார்த்த நகைச்சுவை நடிகர்களில் முக்கியமான ஒருவர். ரஜினிகாந்துடன் “தீ’, “பில்லா” படங்களில் குணசித்திர வேடத்திலும் நடித்திருப்பார். ஹிந்தியில் வெளியான “கோல் மால்” படத்தை தழுவி கே.பாலசந்தர் இயக்கிய “தில்லு முல்லு” படத்தில் ரஜினியுடன் நடித்தார். கமல்ஹாசன் ஒரே ஒரு காட்சியில் நடித்திருப்பார்.
எத்தனை படங்களில் இவர் காமெடி செய்திருந்தாலும், “தில்லு முல்லு”வில் பின்னி எடுத்திருப்பார் தனது நடிப்பால். இன்றும் இந்த படத்தை பலரும் மறந்திருக்க முடியாது. விசுவின் எழுத்தில் வந்த படம் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கும்.
எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான தேங்காய் சீனிவாசனுக்கு திடீரென வந்ததாம் தயாரிப்பாளர் ஆசை. இளையராஜாவின் இசையில், கே. விஜயன் இயக்கத்தில் சிவாஜி கனேசன். கே.ஆர்.விஜயா,மோகன், ரேகா, வீ.கே.ராமசாமி இப்படி மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே கூடிய “கிருஷ்ணன் வந்தான்” படத்தினை தயாரித்தார்.
தனது ஆசையை எம்.ஜி.ஆரிடம் சொல்ல உனக்கு எதற்கு இந்த தேவையில்லாத வேளை என உரிமையோடு கடிந்துள்ளார் எம்.ஜி.ஆர். ஆனாலும் தனது ஆசைப்படியே படத்தை தயாரித்தார். ஆனால் படம் வந்த வேகத்திலேயே திரும்ப படப்பெட்டிக்குள் வந்தடைந்தது. மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்த சீனிவாசன் செய்வது தெரியாமல் நின்றிருக்கிறார்.
எதற்கு எம்.ஜி.ஆரை போய் பார்ப்போம் என சந்தித்திருக்கிறார். நான் தான் ஆரம்பத்திலேயே சொன்னேனே உனக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை, இப்ப இது தேவையா என கேட்டு போ, போ என சொல்லிவிட்டாராம்.
துயரத்தோடு தனதிஉ வீட்டிற்கு வந்த சீனிவானுக்கு காத்திருந்தது மிகப்பெரிய இன்ப அதிர்ச்சி.
இவர் வீடு வந்து சேர்வதற்குள் தனது உதவியாளர்கல் மூலம் இருபத்தி ஐந்து லட்ச ரூபாய் பணத்தை அனுப்பிவைத்துள்ளார் எம்.ஜி.ஆர். அதனைக்கொண்டே மீண்டும் தனது வாழ்வை மேம்படுத்தியிருக்கிறார் தேங்காய் சீனிவாசன்.