cinema news
குரங்கு டிஃபன் கொடுக்கலையாமே?…கோவப்பட்ட எம்.ஜி.ஆர்…தவறை திருத்திக்கொண்ட தயாரிப்பாளர்!…
வாரி, வரிக்கொடுத்து வாழும் வள்ளல் என பெயர் வாங்கியவர் எம்.ஜி.ஆர். தனது ஈகையால் இப்படி ஒரு பெயரை பெற்றிருந்தார் இவர். “அன்பே வா” படப்பிடிப்பின் போது தயாரிப்பாளர் செய்த தவறை சுட்டிக்காட்டி, அதன்பின்னர் வேலையாளர்கள் அனைவருக்கும் கொடுக்கப்பட்ட சம உரிமை சம்பவம் ஒன்று நடந்தேறியதாம்.
எம்.ஜி.ஆர். பட ஷூட்டிங்கின் போதெல்லாம் படத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவருக்கும் டீ, வடை வழங்கப்படுமாம். இதற்கு ‘குரங்கு டிஃபன்’ என பெயர் கொடுக்கப்பட்டிருந்ததாம்.
வழக்கம் போல ‘குரங்கு டிஃபன்’ பரிமாறப்பட்ட பின்னர் “அன்பே வா” படத்தின் தயாரிப்பாளர் சரவணனை அழைத்த எம்,ஜி.ஆர். நீங்கள் இனி வடை சாப்பிடுவது என்றால் உங்கள் அறையில் தனியாக வைத்து சாப்பிடுங்கள். பொதுவெளியில் வைத்து சாப்பிட வேண்டாம் என அறிவுரை கூறினாராம்.
ஏன் இப்படி சொல்கிறீர்கள் என சரவணன், எம்.ஜி.ஆரை பார்த்து கேட்க. பொதுவெளியில் சாப்பிட்டால் அனைவருக்கு கொடுத்துவிட்டு சாப்பிடுங்கள் என எம்,ஜி,ஆர், சொன்னாராம்.
இல்லை அனைவருக்கும் கொடுக்கப்பட்டு விட்டதே என தயாரிப்பாளர் சரவணன் சொல்லியதும் எம்.ஜி.ஆர் தனது விரல்களை மேலே நோக்கி காட்டி இங்கிருக்கும் லைட்-பாய்க்கு உணவு போய் சேரவில்லை என்றாராம்.
அன்றிலிருந்து எல்லோரும் சாப்பிடீர்களா? என பணியாளர்களை பார்த்து கேட்பதை பழக்கமாக்கிக்கொண்டாராம் சரவணன். தனது கண்முன்னே ஒருவர் கூட அறிந்தோ, அறியாமலோ பாரபட்சமாக நடத்தப்பட்டு விடக்கூடாது. எல்லாம், எல்லோருக்கும் என்பதில் எப்போதுமே எம்.ஜி.ஆர். மிக தெளிவாக இருந்ததை சுட்டிக்காட்டிய செயல் இதுவென்று சொல்லப்பாட்டது அந்த நேரத்தில்.
அதோடு மட்டுமல்லாமல் எவ்வளவு பிஸியாக ஷூட்டிங் சென்று கொண்டிருந்தாலும் இது போன்ற தொழிலாளிகள் சம்பத்தப்பட்ட விஷயங்களில் தனி கவனம் செலுத்துவாராம் எம்.ஜி.ஆர்.