ரோஷினி தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகி. இவரது குரலில் உள்ள வசீகரம் தான் இவரின் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. இவரின் பாடல்கள் பல நம் காதுகளில் ஒலித்துக்கொண்டு தான் இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் பாடியது இவர் தான் என்பது நம்மில் பலருக்கு தெரியாமலே இருந்திருக்கலாம்.
இவரின் பாடல்கள் ஒரு சிலவற்றை சொன்னாலே போதும் இவரின் பெருமை தன்னாலே புரிந்துவிடும். சமீபத்தில் வெளியான “மார்க் ஆன்டனி” படத்தில் ஒலித்திருக்கும் ‘ஐ லவ் யூ, மூட கெடுத்த மூதேவி’ பாடல். “எனிமி” படத்தில் வரும் சூப்பர் ஹிட் ‘மாலை டும், டும்’ பாடலை பாடியது ரோஷினியே. இப்போதெல்லாம் திருமண நிகழ்ச்சிகளில் இந்த பாடலை அதிகமாக கேட்க முடியும். அந்த அளவு இன்று வரையிலும் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடல் அது.

சிம்பு நடிப்பில் வெளியாகி ஹிட்டான “ஈஸ்வரன்” பட ‘மாங்கல்யம் உன்னை அள்ளி அனைக்குது விரலு’ பாடல் இவரது சமீபத்திய ஹிட் பாடல்களில் ஒன்றாகும்.
ஹரி இயக்கத்தில் விஷால், பானு குத்தாட்டம் போட்ட “தாமிரபரணி” பட ‘கருப்பான கையாலே என்ன புடிச்சான், மனசுக்குள்ளே பேய் புடிச்ச ஆட்டுதம்மா’ பாடல். “தீராத விளையாட்டு பிள்ளை” படத்தில் வந்திருக்கும் ‘என் ஜன்னல் வந்த காற்று தாவனிப்போட்ட மங்கா’ பாடலும் இவர் பாடியது தான்.
சிம்புவின் வெற்றி படமான “குத்து”வில் ரம்யாகிருஷ்ணன ஆடித்தள்ளிய ‘ஏ போட்டுத்தாக்கு’ என துவங்கி துள்ளி, துள்ளி ஆட வைத்த இந்த குத்துப்பாடலும் ரோஷினியின் வைப்ரேட்டிங் வாய்ஸில் வந்த பாடலே.
இப்படி நாம் அடிக்கடி கேட்டு மகிழ்ந்த இந்த பாடல்க்ளை போல இன்னும் அதிகமான பாடல்களை வருங்காலத்தில் ரோஷினி பாடி மகிழவைப்பார் என நம்புகிறது அவரின் ரசிகர் கூட்டம்.