மீனா தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு கதாநாயகியாக 15 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகங்களில் முன்னணி நடிகையாக இடம்பெற்றுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார்.
கடந்த 2016யில் இவரின் மகள் நைனிகாவையும் “தெறி” படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்தார். பின்பு மீனாவை தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக காணமுடிந்தது.
மீனா எப்போதும் சமூக ஊடகங்களில் அக்டிவ்வாக இருப்பார். இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட போட்டோ ஒன்று ரசிகர்களை திணறவைத்துள்ளது. சிகப்பு நிற புடவையில் மீனா வெளியிட்டுள்ள புகைப்படம் இன்றைய கதாநாயகிகளுக்கே பெரும் சவால்விடும் அளவிற்கு மிகவும் இளமையாக உள்ளார்.

இவரின் போட்டோ பார்த்த ரசிகர் ஒருவர், “அழகு, இளமை துள்ளல் கொண்ட மீனா, நயன்தாராவையே ஓவர் டேக் பன்ன தயார்” என்று பதிவிட்டுள்ளார்.
மீனா இப்போது தலைவர்168 படத்தில் நடிக்கவுள்ளார்