cinema news
கமலுடன் ஈனா மீனா டீகா பாடிய மீனா?…. இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!…
“களத்தூர் கண்ணம்மா” படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமல்ஹாசன். அதன் பிறகே அவர் கதாநாயகன், வில்லன் என பல கெட்டப்புகளில் நடித்திருந்தார். மீனாவும் இவரை போலவே தான் குழந்தை நட்சத்திரமாகவே அறிமுகமானார்.
ரஜினியை செல்லமாக ரஜினி அங்கிள் என அழைத்ததையே முதல் முதலாக கேட்டனர் தமிழ் சினிமா ரசிகர்கள் “அன்புள்ள ரஜினிகாந்த்” படத்தில்.
அதன் பின்னர் ரஜினியுடன் “எஜமான்” படத்தில் ஹீரோயின் ஆனார் மீனா. இதனால் தான் மீனாவுக்கென தனி இடம் கோலிவுட்டில் கிடைத்தது.
ரஜினியுடன் தொடர்ந்து “வீரா”, “முத்து” படங்களில் நடித்தார்.
கமலுடன் நடித்துள்ளார் மீனா. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த “அவ்வை ஷண்முகி” படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. “தெனாலி” படத்தில் க்ளைமேக்ஸ் காட்சியில் கமலுக்கு மனைவியாக நடித்திருப்பார்.
ஜெயராமை குணப்படுத்த கமலும், மீனாவும் சேர்ந்து நாடகமாடியிருப்பர். வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீதும் இந்த காட்சியில் நடித்திருந்தார்.
“அன்புள்ள ரஜினிகாந்த்” படத்தில் குழந்தை நட்சத்திரமாக சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்தது போல, உலக நாயகன் கமல்ஹாசனுடம் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார் மீனா. 1984ம் ஆண்டு வெளியான “யாத்கார்” படத்தில் தான் மீனா தனது சிறு வயதில் நடித்தார்.
மீனாவின் மகள் விஜயுடன் “தெறி” படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ‘ஈனா, மீனா, டீகா’ பாடியிருந்தார். இதே மாதிரி மீனாவும் தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான ரஜினி, கமலுடன் நடித்து ‘ஈனா, மீனா, டீகா’ பாடியிருந்தார்.
எப்படி ரஜினி, கமல் இருவருடனும் குழந்தை நட்சத்திரமாக நடித்தாரோ அதே போல இருவருடனும் ஹீரோயினாகவும் நடித்தும் விட்டார்.