வைரல் ஆகும் மாஸ்டர் புகைப்படம்

58

விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் வரும் பொங்கலுக்கு வர இருக்கிறது என இறுதி முடிவு எடுத்து விட்டார்கள். ஆனால் கடந்த ஒரு வருடமாகவே ப்ரோமஷன் மட்டுமே இந்த படத்திற்கு அதிகம் கொடுத்து வருகிறார்கள்.

இந்த 2020 ஆரம்பத்திலேயே குட்டி ஸ்டோரி பாடல் வந்து விட்டது. சில நாட்களிலேயே ஒவ்வொரு பாடலாக வர தொடங்கிய நிலையில் படம் இன்னும் வரவில்லை. நடுவில் கொரோனா வந்தது.

கொரோனா கட்டுப்பாடுகள் சற்று தளர்ந்து போன பின் இப்படத்தின் டீசர் வந்தது. இப்படி ஒவ்வொரு அப்டேட்டாக வந்து கொண்டிருக்கும் நிலையில் விஜய் மற்றும் ஆண்ட்ரியா தோன்றியுள்ள இந்த புகைப்படம் சமூக வலைதளங்களை சுற்றி வருகிறது.

அதாவது ஆண்ட்ரியாவுக்கு இன்று பிறந்த நாள் என்பதால் படக்குழு இப்புகைப்படத்தை வெளியிட்டு உள்ளதாம்.

பாருங்க:  ரசிகர்களை மெர்சல் பண்ண வேதாவுடன் கலக்க வருகின்ற மாஸ்டர் படத்தின் மாஸ் அப்டேட்