Entertainment
மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்த நிறுவனத்துக்கு எதிராக கொந்தளித்த மாளவிகா
மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை தவறாக பகிர்ந்ததால் நடிகை மாளவிகா மோகனன் முன்னணி செய்தி நிறுவனம் ஒன்றுக்கு எதிராக கடும் கோபமடைந்துள்ளார்.
தமிழில் பேட்ட, மாஸ்டர் படங்களில் நடித்தவர் மாளவிகா மோகனன், இவர் சமீபத்தில் மாலத்தீவு சென்றிருந்தபோது அங்கு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.
இந்த புகைப்படங்களை ஆபாசமாக ஆக்கி மார்பிங் செய்து யாரோ ஒருவர் வெளியிட்ட புகைப்படங்களை ஒரு முன்னணி செய்தி நிறுவனம் எடுத்து வெளியிட்டதால் கடும் கோபமடைந்துள்ளார்.
அந்த செய்தி நிறுவனம் பகிர்ந்த டிவிட்டை மேற்கோள் காட்டி நடிகை மாளவிகா மோகனன் டிவிட்டரில் அந்த நிறுவனத்தை சாடியுள்ளார். அதில், “சமூக ஊடக மைலேஜுக்காக உண்மைச் சரிபார்ப்பைச் செய்யாமல் போலியான போட்டோஷாப் செய்யப்பட்ட அநாகரிகப் புகைப்படங்களைப் பயன்படுத்துவதைக் கண்டு வருத்தமாக இருக்கிறது. Shame on You” என்று டுவிட் செய்துள்ளார்.
