cinema news
இது எப்படி உங்களால முடிஞ்சிது?…ரஜினியை கண்டு வியந்த மனோபாலா!…
‘சூப்பர் ஸ்டார்’ என்ற உச்சத்தை அடைய ரஜினி கடந்து வந்த பாதைகள் எல்லாம் அவ்வளவு எளிதானவைகள் அல்ல. தனது திறமையை மட்டுமே நம்பி வந்து, தோல்விகள் இவரை துரத்த, சிறிது தூரத்திலே திரும்பி நின்று அவற்றை விரட்டி வெற்றிகளாக மாற்றிக்காட்டியவர் அவர்.
ஒரு படத்தில் நடித்து முடிக்க 6 மாதம், ஒரு வருடம், ஏன் இன்னும் அதிகமாக கூட நேரம் எடுத்துக்கொள்கிறார்கள் இன்றைய கதாநாயகர்கள். ஆனால் ஒரு ஆண்டில் மட்டும் ரஜினி 18 படங்களில் நடித்திருக்கிறார். இதனை பற்றி பேசிய மறைந்த மனோபாலா, ரஜினியின் இந்த கடமை உணர்வைக்கண்டு தான் வியந்து போனதாக சொல்லியிருந்தார்.
இது எப்படி சாத்தியமானது என அவரிடமே கேள்வி கேட்டுமிருந்திருக்கிறார் மனோபாலா. அதற்கு ரஜினியோ அதனை கொஞ்சம் கூட பெரிய விஷயமாக நினைக்காமல், அதில் தன்னை பற்றி பெரிதாகவும் காட்டிக்கொள்ளாமல். வசனங்களை எழுதிக்கொடுக்கிறார்கள் நான் நடிக்கிறேன்.
இதில் எனக்கு என்ன சிரமம் இருக்கிறது?. ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கும் தன்னை விட அதிகமான உழைப்பை கொடுப்பவர்கள் ஏராளம். அவர்களோடு ஒப்பிட்டு பார்த்தால் தனது பங்கு அதில் பெரிதாக ஒன்றுமே கிடையாது என எளிமையாக சொன்னாராம். இப்படி தன்னடக்கத்துடன் அவர் பேசியதை நினைத்து பார்த்த மானோபாலாவிற்கு அது ஆச்சரியத்தை கொடுத்ததாம்.
இன்று உள்ள நாயக, நாயகிகள் எல்லாம் ஓரே நாளில் இரண்டு, மூன்று படங்களில் நடித்து வருகின்றார்களே என்ற கேள்விக்கு பதில் கொடுக்கும் விதமாக ரஜினியுடனான தனது பழைய நினைவுகளை மேற்கோள் காட்டி பேசியிருந்தார் ஒரு முறை.