cinema news
சுந்தர.சியை கலங்க வைத்த மனோபாலா…சொன்னதை அப்படியே செய்து காட்டினாராம்.
வெயில் ஒரு பக்கம் வெளுத்து வாங்கிக்கொண்டிருக்க, பள்ளிக்கூடங்கள் எல்லாம் கோடை விடுமுறையை அறிவித்திருக்கிற நேரத்தில் என்டர்டைன்மென்ட்டுக்கு எங்கடா போகலாம்னு மக்கள் திணறிக்கொண்டு அங்கே இங்கேயென போய் பொழுதை போக்கிக்கிட்டு இருக்காங்க. இப்படிப்பட்ட நேரத்தில் தமிழ் சினிமாவிலும் எதிர்பார்த்த அளவிலான படங்கள் எதுவும் பெருசா வெளியாகவில்லை சம்மர் ஸ்பெஷலாக.
விஷாலின் “ரத்னம்” படம் வந்திருந்தாலும் போகவா?, வேண்டாமா?ன்னு யோசித்துக்கொண்டு இருக்கிறார்களாம் ஆடியன்ஸ். ‘கேப்ல கிடா வெட்டுற மாதிரி’, “அரண்மனை 4″லை ரிலீஸ் பண்ணி இருக்கிறார் சுந்தர் சி. பாசிட்டிவான விமர்சனத்தை வாங்கி இருக்கிறது படம். சுந்தர்.சி பேசும் போது மறைந்த மனோபாலாவை பற்றி சொல்லி கலங்கியிருப்பார்.
“அரண்மனை” படங்களின் சில பாகங்களில் நடித்திருப்பார் அவர். கோவை சரளா, சந்தானம், சூரியுடன் இவர் செய்த குறும்புகள ரசிக்கவைத்தது. மற்ற பாகங்கள் மாதிரியே அரண்மனை நான்கிலும் மனோபாலாக்கு ஒரு கேரக்டர் ரெடி பண்ணி வைத்திருந்தாராம் சுந்தர்.சி. உடல்நிலை சரியில்லாமல் போக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மனோபாலா ஒரு மெசேஜ் அனுப்பி இருந்திருக்கிறார் மருத்துவமனையிலிருந்து சுந்தர்.சிக்கு. உன் படத்துல என்னால் நடிக்க முடியல, என்னை மன்னித்துவிடு. என்னால் இனி உனக்கு எந்த தொந்தரவும் இருக்காது எனச்சொல்லி, மருத்துவமனையில் அட்மிட் ஆன போட்டோவையும் இணைத்திருந்தாராம்.
சுந்தர்.சி பதிலுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை, சீக்கிரம் நீங்கள் நலமாயிடுவீங்க, அடுத்த படத்தில் நாம் சேர்ந்து நடிக்கத்தான் போறோம் எனச்சொல்லி நம்பிக்கை கொடுத்திருக்கிறார்.
நான் அதிக நாள் உயிரோடு இருக்க மாட்டேன். உன் கூட இனி நடிக்கும் வாய்ப்பு கிடையாதுன் என பதில் அனுப்பி இருக்கிறார் மனோபாலா. அதே போல அவரது மறைவு செய்தி சுந்தர்.சி.யை வந்தடைந்திருக்கிறது. இனி சுந்தர்.சி.யுடன் இணைவதற்கு வாய்ப்பே கிடையாது என அவர் கடைசியாக சொல்லியது போலவே நடந்து விட்டதாக வருந்தியிருந்தார்.