cinema news
ஹேப்பி பர்த்டே மணிரத்னம்…காத்திருகிறதா மெகா ஹிட்?…
மணிரத்னம் தனது இயக்குனர் ஆற்றலால் தமிழ் ரசிகர்களை மட்டுமல்லாமல் இந்திய திரை உலகத்தையே திரும்பிப்பார்க்க வைத்தவர். கமல், ரஜினி இவர்களின் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத வெற்றியை கொடுத்தவர் இவர்.
“நாயகன்” படத்தின் வேலு நாயக்கர் கதாப்பாத்திரத்தை முன்மாதிரியாக கொண்டு ஏகப்பட்ட படங்கள் வெளிவந்த்து. நட்பை மையமாக கொண்டு ரஜினி – மம்மூட்டியை கூட்டணி சேர வைத்து இவர் இயக்கியது “தளபதி”. தேவா – சூர்யா இன்றும் திரையில் நட்புக்கு உதாரணாம் என சொல்ல வைத்தவர் இவர்.
அரவிந்தசாமி, ஏ.ஆர்.ரகுமான் இருவருக்கும் மிகச்சிறந்த துவக்கம் கிடைக்க காரணமாக இருந்தவரும் மணிரத்னமே.”ரோஜா” படம் இவர்கள் இருவரையும் தமிழ் ரசிகர்களை கொண்டாடித்தீர்க்க வைத்த படம். மாதவனை ஹீரோவாக்கியவரும் இவரே.
“அலைபாயுதே” காதலர்களை மகிழ்வித்தது வெளிவந்த நேரத்தில். மத நல்லினக்கத்தை மனதில் பதியவைக்க இவர் இயக்கிய “பம்பாய்” படத்தினை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்து விட முடியாது தான். இது போல பல படங்களை சொல்லிக்கொண்டே போகலாம் மணிரத்னத்தின் பெயரை சொல்லுபடியான.
மணிரத்னத்தின் 68வது பிறந்த தினம் இன்று. இளம் கதாநாயகர்களுடன் இணைந்தே தனது சமீபத்தைய படங்களை இயக்கி வந்த இவர், நீண்ட வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசனுடன் கைகோர்த்துள்ளார்.
தற்போது படத்தின் பணிகள் தீவிரமாக நடத்தப்பட்டு வரும் நிலையில் மணிரத்னம் இயக்கிவரும் இந்த “தக்-லைஃப்” படத்தினை அதிகமாக எதிர்பார்க்கிறது தமிழ் சினிமா. நிச்சயம் ஒரு மெஹா ஹிட் காத்திருக்கிறது என்ற நம்பிக்கையில் காத்திருக்கும் கமல் ரசிகர்களோடு சேர்ந்து மணிரத்னத்திற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லி வந்து கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள் பலரும்.