நடிகையை துப்பாக்கி முனையில் மிரட்டிய வாலிபர் – ஏன் தெரியுமா?

242

பேஜ்பூரி நடிகை ரிதுசிங்கை  துப்பாக்கி முனையில் மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேஜ்பூரி நடிகையான ரிதுசிங் சமீபத்தில் ஒரு படப்பிடிப்பிற்காக உத்தரப்பிரதேசம் சென்றிருந்தார். அவர் தங்குவதற்காக ஒரு நட்சத்திர ஹோட்டலில் அறையை படப்பிடிப்பு குழுவிவர் ஏற்பாடு செய்தனர்.

நேற்று இரவு அவர் தனது அறையில் உறங்கிக்கொண்டிருந்த போது அவரின் கதவை யாரோ தட்டியுள்ளனர். ரித்துசிங் கதவை திறந்து பார்த்த போது அங்கு வாலிபர் ஒருவர் துப்பாக்கியுடன் நின்றிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது அறைக்கு உள்ளே நுழைந்த அந்த வாலிபர், ரித்துசிங்கிடம் என்னை திருமணம் செய்து கொள். இல்லையேல் உன்னை சுட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சிய அடைந்த ரித்து சிங் கூச்சல் போட்டார்.எனவே, பக்கத்து அறையில் இருந்த வாலிபர் ஒடிவந்தார். அப்போது, அந்த மர்ம நபர் அவரை சுட்டதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து ஒரு மணி நேரம் போராடி அந்த வாலிபரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

முதல் கட்ட விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என தகவல் வெளிவந்துள்ளது.

பாருங்க:  மாஸ்டர் தயாரிப்பாளருக்கு திரையரங்கு உரிமையாளர் சங்கம்