மலேசிய பெண் பார்த்த மாஸ்டர் படம்- ஆதரவும் எதிர்ப்பும்

13

விஜய் ரசிகர்கள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள் எதையும் வித்தியாசமாக செய்து பார்க்கும் வெறித்தனம் அவர்களிடம் உண்டு. நேற்று மலேசியாவை சேர்ந்த மலேசியாவில் வாழும் ஆஷ்லினா என்ற பெண் மாஸ்டர் படத்தை பார்க்க ஒரு தியேட்டரையே புக் செய்துள்ளார். சென்னை மயிலாப்பூரை சேர்ந்த அந்த பெண் கடந்த சில வருடங்களாக மலேசியாவில் வசித்து வருகிறார். விஜய்யின் தீவிர ரசிகையான அவர், மாஸ்டர் படத்தை பார்க்க சென்னை வருவதற்காக பலமுறை முயற்சித்துள்ளார். ஆனால் முடியவில்லை இந்த நிலையில் மாஸ்டர் படத்தை பார்க்க அனைத்து இருக்கைகளையும் சென்னை அண்ணாசாலையில் உள்ள தியேட்டரில் புக் செய்து  தன் குடும்பத்தினருடன் மட்டும் படம் பார்த்துள்ளார்.

இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரல் ஆன உடன் வழக்கம்போல் இரு பிரிவாக பிரிந்து இந்த பெண்ணை திட்டவும் வாழ்த்தவும் செய்கிறார்கள் சமூக வலைதள வாசிகள்.

படம் பார்ப்பதை தவறுன்னு சொல்லவில்லை இப்படி வீண் செலவு செய்து மொத்த டிக்கெட்டையும் வாங்கி படம் பார்ப்பது பணத்திமிர்தான் அந்த பெண்ணுக்கு என பலர் வசைபாடி வருகின்றனர்.

அதே நேரத்தில் அந்த பெண்ணின் செயலை விஜய் ரசிகர்கள் போற்றி புகழ்ந்து வருகின்றனர்.

பாருங்க:  தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் ரகுல் ப்ரீத் சிங் - வைரல் வீடியோ