Entertainment
அது வேணும்னா அரண்மனையா இருக்கலாம்…ஆனா நான் தான் மகாராஜா…அடிச்சி தூக்கிய விஜய்சேதுபதி?…
கோடம்பாக்கத்திற்கு இந்தாண்டு துவக்கம் கொஞ்சம் மோசமாகவே தான் இருந்தது என சொல்ல வேண்டும். பெரிய படங்கள் எதும் வெளியாகவில்லை. உச்ச நட்சத்திரங்களின் படங்களின் வெளியீடு அறவே இல்லை.வந்த படங்களும் பெரிதாக எடுபடவில்லை. தயாரிப்பாளர்களுக்கு பெரிய அளவில் கலக்சனும் இல்லை. இது எல்லாம் தொடர்கதைகளாகவே இருந்து வந்தது “அரண்மனை – 4” ரிலீஸ் ஆவதற்கு முன்னர் வரை.
சுந்தர்.சி. இயக்கத்தில் சம்மர் ஸ்பெஷலாக வந்தது இந்த படம். திகில் நிறைந்த காட்சிகள் படத்தில் இடம்பெற்றதனால் அரங்கம் நிறைந்த காட்சிகளாகவே ஓடியது. இந்த ஆண்டின் முதல் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படமாக மாறியது “அரண்மனை – 4”. இந்த கலக்சன் சுந்தர்.சி.யை படு குஷியில் ஆழ்த்தியது.
படம் எழுபத்தி ஐந்து கோடி வரை வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் வெளியானது “மகாராஜா”. விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படம் இது. படத்திற்கு மிகப்பெரிய ப்ள்ஸ் பாயிண்ட்களாக அமைந்தது விஜய்சேதுபதியின் நடிப்பும், இயக்கமும் தான். வெளியானதில் இருந்து பாஸிட்டிவ் விமர்சனங்களையே அதிகமாக பெற்றது.
அதே மாதிரித்தான் வசூலும். வெறியாட்டம் போட்டது படத்தின் கலக்சன். படம் வெளியானதிலிருந்து இந்திய அளவில் எழுபத்தி ஆறு கோடி ரூபாயும் (ரூ.76 கோடி/-), வெளி நாடுகளில் இருபத்தி நாலு கோடியும் (ரூ.24/-கோடி) என இதுவரை நூறு கோடி (ரூ.100கோடி/-) ரூபாயை எட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த ஆண்டின் முதல் நூறு கோடி ரூபாய் படமாக விஜய்சேதுபதியின் “மகாராஜா” மாறியுள்ளதோடு மட்டுமல்லாமல் “அரண்மனை – 4” வசூலை பின்னுக்குத் தள்ளி சாதனை படைத்துள்ளது.
ரஜினியின் “வேட்டையன்”, கமலின் “இந்தியன் – 2”, அஜீத்தின் “விடாமுயற்சி”, விஜயின் “கோட்”, சூர்யாவின் “கங்குவா” என வரிசையாக முன்னனிக்களின் படங்கள் ரிலீஸாக காத்திருக்கிறது என எதிர்பார்க்கபடுகிறது இந்த ஆண்டு. இவர்களில் யாரினுடைய படம் “மகராஜா”வின் சாதனையை முதல் ஆளாக முறியடிக்கப்போகிறது என்பதுவே இப்போதைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.