முற்றும் இந்தியன் 2 விவகாரம் - ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பிய லைக்கா

முற்றும் இந்தியன் 2 விவகாரம் – ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பிய லைக்கா

இந்தியன் 2 பட விவகாரம் தொடர்பாக இயக்குனர் ஷங்கருக்கு லைக்கா நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இந்தியன் 2 திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. ஆனால், கமல்ஹாசனின் மேக்கப்பில் திருப்தி இல்லாத ஷங்கர் படப்பிடிப்பை தள்ளிப்போட்டார் அதன்பின் கமல்ஹாசன் அரசியலில் பிஸி ஆகிவிட்டார். தற்போது தேர்தல் முடிந்த பின்னரும் இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கப்படவில்லை. எனவே, இப்படம் கை விடப்பட்டதாக செய்திகள் பரவி வருகிறது. ஷங்கரும் இப்படத்தை விட்டுவிட்டு வேறு படத்தை துவங்கும் வேலையில் ஈடுபட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில், லைக்கா நிறுவனம் ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தற்போது செய்திகள் பரவி வருகிறது. அதில் இந்தியன் 2 படப்பிடிப்பை துவங்குமாறு அதில் நிர்பந்திக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.