cinema news
ஆஹா இது அதுள்ள?…போதும் போதும் லிஸ்ட் பெருசா போகுது!…
தமிழ் சினிமாவில் முன்னனி கதாநயகர்கள், அறிமுக நாயகர்கள் நடித்து வெற்றி பெற்று வசூல் வேட்டையாடிய படங்கள் பல பிற மொழிகளிலிருந்து ரீ-மேக் செய்யப்பட்டவையாக இருந்துள்ளது. எம்.ஜி.ஆர், ரஜினி படங்கள் கூட இதற்கு விதிவிலக்கல்ல.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடித்த படம் ரீமேக் செயப்பட்டு தமிழ் வெளியானது. அது ரஜினி நடித்த காமெடி படமான “அதிசயபிறவி”. “அதனாகோடு” தெலுங்கு படம் தான் விஜய் நடிப்பில் வெளியான “ஆதி”. “சித்திரம் பலேரே விசித்திரம்” என்ற படத்தை அப்படியே உல்டா அடித்து வெளியிடப்பட்ட படம் பிரசாந்திற்கு பெரும் பெயர் வாங்கிக் கொடுத்தது.
பெண் வேடமிட்டு பிரசாந்த் லூட்டி அடித்த படமான “ஆணழகன்” தான் அது. “எங்க வீட்டு பிள்ளை” எம்.ஜி.ஆரின் கேரியரில் மிக பெரிய ஹிட்டாக அமைந்தது. இரட்டை வேடங்களில் வந்திருப்பார் அவர் இதில். தெலுங்கில் வந்த “ராமுடு பீமுடு” தான் நம்ம ஊரில் வெளியான “எங்க வீட்டு பிள்ளை”.
இதில் “ஜெயம்” ரவி சற்றே வித்தியாசத்தை காட்டியிருந்தார். படத்தை ரீ-மேக் செய்து வேறு பெயர் கொடுத்து வெளியிடப்பட்ட நேரத்தில் அதே பெயரில் வெளியிட்டிருப்பார் இவர் .தெலுங்கின் “ஜெயம்” படம் அதே பெயரிலேயே தமிழிலும் வெளியானது.
“கார்த்தாவியம்” படம் ரீ-மேக் செய்யப்பட்டு “பவானி” என்ற பெயரில் வெளியானது தமிழில். சினேகா இதில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஜீ,வி. பிரகாஷ் நடித்த “டார்லிங்”, தெலுங்கில் வெளியான “ப்ரேம கத சித்திரம்”. விஷால் நடித்த “அயோக்யா” தெலுங்கின் “டெம்பர்” படம். நவரச நாயகன் கார்த்திக் நடித்த “லக்கி மேன்” வயிறு குலுங்க சிரிக்க வைத்த படம் ரசிகர்களை. இது தெலுங்கில் வெளியான “எமலீலா” வின் ரீ-மேக்.