actor visu
actor visu

பழம்பெரும் நடிகர் விசு காலமானார்

இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், மேடை நாடக நடிகர், திரைப்பட நடிகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என பன்முக கலைஞராக திகழ்ந்தவர் நடிகர் விசு. இவர் 1941இல் சென்னையில் பிறந்தவர். தமிழ் திரை உலகிற்கு பல இன்னல்களுக்கு அப்பால் “குடும்பம் ஒரு கதம்பம்” என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்பு இவரை இயக்குனராக பிரபலம் அடையச் செய்தது “மணல் கயிறு” என்ற திரைப்படம்தான். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் இயக்குனராகவும், கதாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும், நடிகராகவும், தொடர்ந்து நடித்து வந்தார்.

Manal kayiru
Manal kayiru

இவர் இயக்கிய “சம்சாரம் அது மின்சாரம்” திரைப்படம் பெரும் அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தை இந்திய மொழிகளில் மீண்டும் எடுக்கப்பட்டது. இத்திரைப்படத்திற்கு 1986ஆம் ஆண்டு சிறந்த படத்திற்கான பிலிம்பேர் விருதை வென்றது. இவருடைய திரைப்படங்கள் பெரும்பாலும் குடும்ப கதையை கருவாக கொண்டு இருக்கும். சிறிது காலத்திற்கு பிறகு இவரை சினிமாவிலிருந்து காணவில்லை. அந்த சமயத்தில் தான் இவர் அரட்டை அரங்கம் என்ற பேச்சு நிகழ்ச்சியை தனியார் தொலைக்காட்சியில் நடத்தினார்.

Samsaram_Adhu_Minsaram
Samsaram_Adhu_Minsaram

அதனைத் தொடர்ந்து இவரை சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் காண்பது என்பது அரிதானது. நீண்ட இடைவேளைக்கு பிறகு, இவரை சமூக வலைத்தளத்தில் ஒரு நேர்காணலில் காணமுடிந்தது. அதில் அவர் தன் திரையுலக சுவாரஸ்யம் மிகுந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நடிகர் விசு இன்று மார்ச்22யில் தனது 74 ஆம் வயதில் காலமானார். திரைத்துறை சார்ந்த பிரபலங்கள் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.