Latest News
ஆல் சைலன்ஸ் அண்ணாச்சி ஆன் தி வே…கெட்-அப்பை சேஞ்ச் பண்ண வச்ச கருடன் இயக்குனர்!…
ஒரே படத்தின் மூலம் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் சரவணன். தமிழ் நாட்டின் முக்கிய தொழிலதிபரான அண்ணாச்சி சரவணன் திடீரென சினிமாவில் நடிக்க துவங்கினார்.
“லெஜென்ட்” படத்தின் மூலம் தன்னை அறிமுகப்படுத்தி திரும்பி பார்க்க வைத்தார். படம் பெற்ற கலெக்சனை விட ப்ரமோவிற்காக செய்த செலவே அதிகம் என்றெல்லாம் விமர்சனம் வந்தது படம் வெளியான நேரத்தில்.
சிவகார்த்திகேயனை வைத்து “எதிர் நீச்சல்” படத்தை இயக்கியவர் துரை செந்தில்குமார். சிவாவின் சினமா கேரியரில் மிகப்பெரிய டிவிஸ்ட் கொடுத்த படமாக அமைந்ததோடு மட்டுமல்லாமல், துரை செந்தில்குமாரின் மாஸையும் அதிகரித்தது.
அதன் பின்னர் அவர் இயக்கிய “கொடி”, “பட்டாஸ்” படங்கள் பெரிய அளவில் போனியாகவில்லை.
“விடுதலை” படத்திற்கு பின்னர் சூரி கதாநாயகனாக நடித்து வசூல் வேட்டையாடி வரும் “கருடன்” படத்தை இயக்கியிருந்தார் துரை. “லெஜென்ட்”படத்திற்கு பிறகு மிகப்பெரிய ப்ரேக் கொடுக்க காத்திருக்கும் சரவணனும், துரை செந்தில் குமாரும் இணையும் புதிய படத்தின் அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.
விரைவில் பெயர் வைக்கப்பட உள்ள இந்த படத்திற்காக சரவணன் தனது கெட்-டப்பை டோட்டலாக மாற்றியிருக்கிறார்.
முரட்டு தாடி, கையில் துப்பாக்கியுடன் இவர் இருக்கும் போஸ்டர் தான் இப்போ வைரல். சரவணனின் இந்த ஸ்டில்லை பார்த்ததுமே சொல்லி விடலாம் படம் வேற லெவல் ஆக்ஸன் மூவியாகத்தான் இருக்கப்போகிறது என.
ரெக்கார்ட் ப்ரேக்கிங் ஹிட் கொடுத்த “கருடன்” படத்திற்கு பிறகு துரை செந்தில் குமார் இயக்க உள்ள படம் என்பதாலும், சிறிய இடைவேளைக்கு பிறகு சரவணன் நடிக்க இருப்பதாலும் படத்தை பற்றிய எதிர்பார்ப்பு இப்போதே எகிறத்துவங்கியுள்ளது.