“ஜென்டில்மேன்” படத்தில் ‘சிக்கு புக்கு’ ரயிலே பாடலில் பிரபு தேவா மற்றும் குழுவினருடன் சேர்ந்து டான்ஸ் ஆடியிருப்பார் ராகவா லாரன்ஸ். “அமர்க்களம்”த்தில் அஜீத்துடன் ஒரு பாடல், “திருமலை”யில் விஜயுடன் ஒரு பாடல், அப்படியே நடன இயக்குனராக மாறியவர் இவர்.
அடுத்த குறி கதாநாயகனாக மாறுவது என வைத்து, தனது இலக்கை சரியாக அடைந்தார் இவர். ஹீரோவை மையமாக கொண்ட சப்ஜெக்ட்களில் நடிக்க துவங்கிய இவர். திடீரென அமானுஷ்ய சக்திகளின் மீது தனது கவனத்தை திருப்பினார்.
‘பேய்’ என்றால் அது பெண்ணாகத்தான் இருக்கும் அதுவும் வெள்ளை கலரில் மட்டுமே சேலை அணிய வேண்டும். அது மட்டும் தான் ‘பேய்’ என்பது தமிழ் சினிமாவில் எழுதப்படாத ஒரு சட்டமாக இருந்து வந்தது.
“முனி” படத்தில் இவர் அதை முறியடித்தார் லாரன்ஸ். முரட்டுத்தனமான வேடங்களில் நடித்து வந்த ராஜ்கிரன் பேயாக மாறி லாரன்ஸின் உடலுக்குள் புகுந்து எதிரிகளை பழிவாங்குவது தான் படத்தின் கதை. படம் நினைத்தை விட அதிகாமான வரவேற்பை பெற்றது.

அடுத்ததடுத்து ‘முனி’ போன்ற கதைகளில் மட்டுமே தேர்ந்தெடுத்து அதில் நடித்து வந்தார். இவருக்கு இதில் அதிகமாக உதவியவர் ‘கோவை’சரளா தான் என்றே சொல்ல வேண்டும் நடிப்பில் அசத்தி படத்தை வேற லெவலுக்கு எடுத்து சென்றிருந்தார் ‘கோவை’சரளா. “முனி’ பெயர் மறைந்து “காஞ்சனா”வாக மாறியது.
இப்போது “காஞ்சனா”, “முனி” வரிசையின் அடுத்த பாகத்தை தயாரித்து நடிப்பது குறித்த முடிவை எடுத்துவிட்டாராம் ராகவா லாரன்ஸ்.
ரஜினியுடன் நடித்து வரும் இவர் எப்படியாவது “காஞ்சனா” அடுத்த பாகத்தை வருகிற செப்டம்பரில் துவக்கியாக வேண்டும் எனபதில் ஆர்வம் காட்டுவதாக தெரிய வந்துள்ளது.