Connect with us

மனைவியை மாற்றினாரா நாட்டாமை?….உள்ளே புகுந்து இடத்தை பிடித்த குஷ்பூ!…

sarathkumar kushboo

cinema news

மனைவியை மாற்றினாரா நாட்டாமை?….உள்ளே புகுந்து இடத்தை பிடித்த குஷ்பூ!…

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடித்து மாபெரும் வெற்றியை கண்ட படம் “நாட்டாமை”. படத்தில் சரத்குமார் இரண்டு வேடங்களை செய்திருந்தார். சண்முகம் சரத்குமார் ஊர் நாட்டாமையாகவும், அவரது தம்பி பசுபதி என கலக்கியிருப்பார் இரண்டு விதமான கேரக்டர்களின் நடிப்பிலும்.

தவறான தீர்ப்பினை சொல்லிவிட்டோமே என மனம் வருந்தி இறந்துவிடுவார் சண்முகம், அதன் பின்னர் பசுபதி நாட்டாமை ஆவார். படத்தின் பாடல்களும் வெற்றிக்கு உதவி செய்திருந்தது. அதே போல படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது கவுண்டமணி, செந்திலின் காமடியுமே. கவுண்டமணியும் இதில் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.

ஊர் நாட்டாமை சண்முகம் சரத்குமாருக்கு மனைவியாக குஷ்பூ நடித்திருந்தார். குஷ்பூவி பெண் பார்க்க செல்லும் கட்சியில் மனோரமாவின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது படம் வெளிவந்த அந்த நேரத்தில். அமைதியான அடக்கமான குடும்பப்பெண்ணாக வந்திருப்பார் குஷ்பூ.

இவரகள் இருவருக்கும் டூயட் பாடல்  கூட உண்டு படத்தில். ‘கொட்ட பாக்கும் கொழுந்து வெத்தலையும் போட்ட வாய் சிவக்கும்’ என்ற பாடல் தான் அது. படத்தில் குஷ்பூவிற்கு மிகுந்த பலம் வாய்ந்த வேடம் தான் வழங்கப்பட்டது.

sarathkumar lakshmi

sarathkumar lakshmi

இந்த வேடத்தில் முதன்முதலில் நடிப்பதாகயிருந்தது லட்சுமி தானாம். ஆனால சில காரணங்களால் அவருக்கு பதிலாக குஷ்பூ நடிக்க வைக்கப்பட்டாராம். பசுபதி சரத்குமாருக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார்.

இந்த இரண்டு ஜோடிகளின் யதார்த்தமான நடிப்பு ரசிகப்பெருமக்களை வெகுவாக கவர்ந்தது. ஆனால் “நாட்டாமை” படத்தில் சரத்குமாருடன் இணையும் வாய்ப்பை தவறவிட்ட லட்சுமி “ஐயா” படத்தில் அய்யாத்துரை சரத்திற்கு மனைவியானார். இந்த படத்திலும் சரத்குமார் இரண்டு வேடங்களில் நடித்திருந்தார்.

More in cinema news

To Top