பணமாலை அணிந்து குபேர பூஜை செய்த வனிதா விஜயகுமார்

பணமாலை அணிந்து குபேர பூஜை செய்த வனிதா விஜயகுமார்

வனிதா விஜயகுமாரை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. சந்திரலேகா, மாணிக்கம் படங்களில் நடிக்க தொடங்கிய இவர் ஒரு கட்டத்தில் நடிப்பை விட்டு விலகி விட்டார்.

இருப்பினும் தனது தந்தை விஜயகுமாருடன் பிரச்சினை, சகோதரர் அருண் விஜய்யுடன் பிரச்சினை என ஏதாவது ஒரு பிரச்சினையும் விமர்சனங்களும் இவர் மீது வந்து கொண்டே இருக்கும்.

சில மாதங்களுக்கு முன் பிக்பாஸ் ஷோவில் பங்கேற்றார் இவர். இவர் சமீபத்தில் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர் மூன்றாவது திருமணம் செய்து கொண்டது குறித்து பீட்டர் பாலின் முதல் மனைவி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தன் கணவர் பீட்டர் பாலை தன்னிடம் இருந்து பிரித்துவிட்டதாக குற்றம் சாட்டினார்.

இது சமூக வலைதளங்களில் பேசுபொருள் ஆன நிலையில் தன்னை எதிர்த்து பதிவிட்ட, பேசிய பலருக்கு பதிலடி கொடுத்து வந்தார். பிரபல நடிகையும் இயக்குனருமான லட்சுமி இராமகிருஷ்ணனும் வனிதாவின் கண்டனகனைகளில் இருந்து தப்பவில்லை.

சமீபத்தில் பீட்டர்பாலுக்கு உடல்நலமும் பாதிக்கப்பட்ட நிலையில் அதுவும் செய்தியானது. இந்நிலையில் வனிதா வீட்டில் குபேர பூஜை நடத்தியுள்ளார்.2020ம் ஆண்டு அனைவருக்குமே பிரச்சினை தரக்கூடிய ஆண்டாக அமைந்து விட்டது இனிவரும் காலங்களாவது அனைவருக்கும் நல்லவிதமாக அமைய வேண்டி குபேர பூஜை செய்ததாக இவர் கூறினார்.

கழுத்தில் பணமாலையுடன் பூஜையறையில் குடும்பத்துடன் இவர் காட்சி தருகிறார். இந்த படம் வைரலாகி வருகிறது.