Kodi ramakrishna is passed away

பிரபல இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா திடீர் மரணம்

பிரபல தெலுங்கு பட இயக்குனர் கோடி ராமகிருஷ்னா உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

அருந்ததி உட்பட தெலுங்கில் 100க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர் கோடி ராமகிருஷ்ணா. இவர் இயக்கிய இதுதாண்டா போலீஸ், வைஜெயந்தி போலீஸ் உள்ளிட்ட பல தெலுங்கு படங்களில் தமிழில் டப் செய்யப்பட்டு மாபெரும் ஹிட் அடித்தது. இன்னும் சொல்லப்போனால் தெலுங்கு சினிமாக்களுக்கு தமிழ்நாட்டில் நல்ல மார்க்கெட்டை உருவாக்கி கொடுத்ததே அவர்தான்.

நுரையீரல் பிரச்சனையில் அவதிப்பட்ட வந்த அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், சிகிச்சை பலன்றி அவர் இன்று மரணமடைந்தார். அவரின் மரணம் தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.