cinema news
என்னது இவங்கல்லாம் நடிகர்களா?…சத்தியமா நம்பவே முடியலையே!…
வில்லன்கள் கதாநாயகர்கள் ஆனதும், கதாநாயகர்கள் நகைச்சுவை நடிகர்கள் ஆனதும், இப்படி சூழ்நிலையால் தங்களின் நிலைப்பாட்டினை காப்பாற்ற முடியாமலும் ரசிகர்களின் எண்ண ஓட்டத்தை திருப்தி படுத்துவற்காகவும் மாற்றங்களை செய்தவர்களும் உண்டு.
இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தனது படங்களில் ஒரு காட்சியிலாவது தலையை காட்டும் பழக்கத்தை வைத்தருந்தார்.
ஆனால் சினிமாவில் தங்களுக்கான ஓர் உரிய அங்கீகாரம் கிடைக்கும் முன்னரே ஓரிரு காட்சிகளில் தலையை காட்டி பெரும்பாலானவர்களால் கவனிக்கப்படாமல், பின்னாட்களில் வி.வி.ஐ.பிகளாக மாறியவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
“நண்பன்”படம் விஜய்க்கு முக்கியமான படமாக அமைந்தது. ஷங்கர் இயக்கத்தில் இலியானா விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருப்பார். இந்த படத்தில் விஜய் – இலியானா நடனமாடிய ‘அஸ்கலஸ்கா’ பாடலில் ஒரு காட்சியில் தற்பொழுது ஒட்டு மொத்த இந்தியாவையே கலக்கிவரும் இயக்குனரான அட்லீ நடித்திருப்பார். நம்மில் பெரும்பாலோனனோர் இதனை கவனித்திருக்க தவறியிருக்கலாம்.
“சென்னை – 600 028” முதல் பாகம் இன்றும் பலரால் மறக்காத முடியாத ஒரு படம், நண்பர்களுடன் வாலிப பருவத்தில் கடந்து வந்த பாதையை நினைவு கூறும் விதமான பல காட்சிகள் இதில் இடம் பெற்றிருக்கும்.
கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து வெளிவந்த இந்தப்படத்தில் கதாநாயகர்களில் ஒருவரான ஜெய் பந்து வீசுவது போன்ற காட்சி ஒன்றில் இயக்குனர் பா.ரஞ்சித் நடித்திருப்பார். பீல்டிங் செய்யும் வீரர்களில் ஒருவராக சில நொடிகள் மட்டுமே வந்திருப்பார்.
இவர்களைப்போலவே இயக்குனர் வெற்றிமாறனும் ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். 2002 ம் ஆண்டு இயக்குனர் கதிர் இயக்கத்தில் வெளிவந்த படம் காதல் வைரஸ். ஷாலினி அஜீத்குமாரின் சகோதரர் ரிச்சர்ட் கதாநாயகனாக அறிமுகமான படம். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்க ஸ்ரீதேவி இந்த படத்தில் நாயாகியாக நடித்திருந்தார்.
ஸ்ரீதேவி வீட்டை விட்டு வெளியே வருவது போன்ற காட்சி ஒன்று இடம் பெற்றிருக்கும். அந்த காட்சியில் காரில் ஒரு நபர் கையில் கத்தியோடு உட்கார்ந்திருப்பார். அவர் வேறு யாருமல்ல இயக்குனர் வெற்றிமாறனே.