“கில்லி”பட ரீ-ரிலிஸுக்கு பிறகு படத்தை பற்றி பல தகவல்கள் வந்த வண்ணமே உள்ளது. வெளியான நேரத்தில் கூட இவ்வளவு பேச்சுக்கள் அடிபட்டு இருக்காது. இப்பத்தான் ஃப்ரெஸ் ரிலீஸ் மாதிரி தான் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் “கில்லி”, “கில்லி” என எல்லார் காதிலிலும் இந்தப் படத்தைப் பற்றிய சப்தங்கள்தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
சரண் இயக்கிய “ஜெமினி” படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் கிரண். அந்த படத்தில் ‘கட்ட கட்ட நாட்டுக்கட்ட’ பாடல் கிரணுக்கு நல்லதொரு பெயரை பெற்றுத்தந்தது.
தொடர்ந்து கமல்ஹாசனுடன் “அன்பே சிவம்”, அஜித்துடன் “வில்லன்” படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார். பிரசாந்துடன் “வின்னர்” படத்தில் நடித்திருந்தாலும் குறுகிய காலம் மட்டுமே இவர் தமிழ் சினிமாவில் பயணிக்க நேர்ந்தது.

விஜய் உடன் “திருமலை” படத்தில் ‘வாடியம்மா ஜக்கம்மா’பாடலில் மட்டும் தலை காட்டினார் வெகு நாட்களுக்குப் பிறகு. விஜய்க்கு ஈடுகொடுத்து அந்த பாடலில் இவர் ஆடிய நடனம் இவரை பற்றி பேசவைத்தது. இதன் மூலம் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்ப்புக்கள் கிளம்பியது. ஆனால் அவையெல்லாம் புஷ்வானமகிப்போனது.
முதலில் “கில்லி” படத்திற்கான வாய்ப்பு இவரை தேடி வந்ததாம். அந்த நேரத்தில் அவர் தீவிரமாக ஒருவரை காதலித்துக் கொண்டிருந்ததால் இந்த படத்தின் மீது அதிகமாக அக்கறை செலுத்த முடியாமல் போய்விட்டதாம்.
அதனால் தான் தனக்கு வாய்ப்பு பரிபோனதாக கவலை தெரிவித்து இருந்தார் கிரண். அப்படி ஒரு வேலை கிரண் நடித்திருந்தால் தனலட்சுமியாக இவர் தான் வந்திருப்பார், ரசிகர்கள் எல்லாம் தியேட்டர் ஸ்கிரீன் முன் நின்று அவருக்குத்தான் ‘ஓ’ போட்டு இருப்பார்கள் என நினைக்க வைத்துவிட்டது கிரணின் குமுறல்.