திருநங்கை திருமணம் பற்றி நெட்டிசன் ஒருவர் அளித்த கமெண்ட்டுக்கு கஸ்தூரி கூறிய பதிலடி அவருக்கும், அஜித் ரசிகர்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வருடம் அருண் என்பவர் ஸ்ரீஜா என்கிற திருநங்கையை கோவிலில் திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவர்களுக்கு திருமண சான்றிதழ் வழங்கப்படவில்லை. அதனால் கடந்த சில மாதங்களாக போராடி அவர் திருமண பதிவு சான்றிதழை பெற்றுள்ளார்.
இந்த தம்பதியை பாராட்டி நடிகை கஸ்தூரி தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை இட்டிருந்தார். அதில் ‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? தமிழகத்தின் முதல் அதிகாரப்பூர்வ ஆண்-திருநங்கை தம்பதி அருண்- ஸ்ரீஜா. புரட்சி தொடரட்டும். அன்பு மலரட்டும். வாழ்த்துக்கள்.’ என பதிவிட்டிருந்தார். அவர்களின் புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.

இதைக்கண்ட ஒருவர் ‘மேட்டர் மட்டும்தான் பண்ண முடியும். குழந்தைக்கு எங்க போவான்.இது ஒரு புரட்சின்னு பாராட்டு வேற’ என ஆபாசமாக பதிவிட்டிருந்தார். அவர் தன் புரபைல் புகைப்படத்தில் அஜித்தின் புகைப்படத்தை வைத்திருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த ‘இப்படி பேசுறவன் எவன்னு பாத்தா.. ஓ. அப்ப சரி.. அப்ப சரி…’ என பதிலடி கொடுத்தார். இதைத் தொடர்ந்து அஜித் ரசிகர்கள் கஸ்தூரிக்கு எதிராக கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர். அதேபோல் கஸ்தூரிக்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள் களம் இறங்கி கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.