1980 , 90 காலங்களில் கொடி கட்டி பறந்தவர் நவரச நாயகன் கார்த்திக். இவருடைய துள்ளலான நடிப்பினாலும், துருதுறுப்பினாலும் ஆண், பெண் என இரு பாலர் ரசிகர்களையும் கவர்ந்திழுத்தவர். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு படங்களில் கதாநாயகனாக நடிப்பதை தவிர்த்துக் கொண்டார், அரசியலிலும் தற்பொழுது இறங்கியுள்ளார்.
கார்த்திக் நடிப்பில் வெளிவந்த படங்களில் பல வெற்றி படங்களாக அமைந்தது. இவரது தந்தை முத்துராமனுக்கு இருந்த ரசிகர் கூட்டத்தை விட, இவருக்கு சற்று அதிகமாகவே ரசிகர் மன்றங்கள் இருந்தது. பாரதிராஜாவின் “அலைகள் ஓய்வதில்லை”யே இவரின் முதல் படம். “பொன்னுமணி”, “மேட்டுக்குடி”, “உள்ளத்தை அள்ளித்தா” உள்பட ஏராளமான படங்கள் நடித்துள்ளார்.

கார்த்திகை வேற லெவலுக்கு கொண்டு சென்ற படம் “மௌன ராகம்”. மணிரத்னத்தின் இயக்கத்தில் மோகன், ரேவதி ஆகியோரும் இதில் நடித்திருந்தனர். மணிரத்னம் கதை சொன்ன பொழுது இந்த படத்தில் நீங்கள் வெறும் இருபது நிமிடம் மட்டுமே வருவீர்கள் என்றும் கதையை மேலோட்டமாக மட்டுமே சொன்னாராம்.
ரேவதியை துரத்தி, துரத்தி காதலிக்கும் கார்த்திக், அப்போது வரும் பின்னனி இசை, இவை அந்த கால இளசுகளை கிறங்கடித்தது. “மிஸ்டர்.சந்திர மௌலி” என இவர் பேசின அந்த காட்சி காதலர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது.
ஆனால் படம் வெளிவந்த பிறகு கார்த்திக், மோகன்- ரேவதி நடித்த காட்சிகளுக்கு கிடைத்த முக்கியத்துவத்தை பார்த்தும், அவை எடுக்கப்பட்ட விதத்தினாலும் அசந்து போனாராம் கார்த்திக். முழு கதையை கேட்காமல் சம்மதித்ததற்கு காரணம் மணிரத்னம் தானாம். யார் கதை சொல்கிறார்கள் என்பது தான் முக்கியமாம். எவ்வளவு விரிவாக, எவ்வளவு நேரத்தில் சொல்கிறார்கள் என்பது முக்கியமல்லையாம். அதே போல படம் வெளிவந்து மிகப்பெரிய ஹிட்டானது.