சினிமாவில் நடிகராக வேண்டும் என்கின்ற ஆசையில் பலரும் கோடம்பாக்கத்திற்கு வந்து சென்ற வண்ணம் நிறைய பேர் இருந்து வருகின்றனர். அடி மேல் அடி வாங்கி தங்களது கனவை நினைவாக்கியவர்கள் பலரும் உண்டு. அதே மாதிரி நினைத்தது நடக்காமல் வேறு வேலைக்கு சென்றவர்களும் உண்டு.
இந்த ஆசையோடு தான் தமிழ் சினிமாவிற்குள் நுழைய வந்தார் கண்ணதாசன். அவர் எண்ணியது ஈடேறவில்லை. அதனால் சோர்ந்து போகவும் இல்லை. தனக்கு மற்றொரு திறமையும் உண்டு அது தெரிந்து விட்டால் வாய்ப்பு தேடி நான் போக வேண்டாம்,வாய்ப்பு என்னை தேடி வரும் என்று சொல்லும் அளவில் தனித்துவம் கொண்டுன் விளங்கினார் கண்ணதாசன்.
இவரது பாடல் வரிகள் சொல்லாத விஷயங்களே கிடையாது.அந்த அளவில் தான் இவரது பாடல் வரிகளில் அன்பு, காதல், காமம், போட்டி எல்லாமே அடங்கியிருக்கும்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார் கண்ணதாசன். பல இடங்களில் பேசும் போது அவரே கூட அது பற்றி சொல்லியிருந்தார்.

“ரத்த திலகம்” படத்தில் ஒலிக்கும் ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு பாடல் முழுக்க, முழுக்க கண்ணதாசனை பற்றிய எழுதியிருந்தார். கே.வி. மகாதேவன் இசையில், டி.எம்.சௌந்தர்ராஜன் பாடலை பாடியிருந்தார்.
1963ம் ஆண்டு வெளிவந்தது “ரத்த திலகம்”. சிவாஜி ஹீரோவாக நடித்திருந்தார். சாவித்திரி சிவாஜிக்கு ஜோடி. கிருஷ்ணன் – பஞ்சு படத்தினை தயாரித்திருந்தனர்.
திரைக்கதை எழுதி படத்தை இயக்கி இருந்தார் தாதா மிராசி. தேவராஜன் எடிட்டிங் செய்திருந்தார்.நாகேஷ், மனோரமாவின் நகைச்சுவையோடு படம் வெளிவந்தது. ஜெகிர்தார் ஒளிப்பதிவு செய்ய,