வெந்த புண்ணில் வேல் பாய்ச்ச வேண்டாம் – சுபஸ்ரீயின் பெற்றோரை சந்தித்த கமல் பேட்டி

185
kamalhaasan

பேனர் விழுந்ததால் சாலை விபத்தில் மரணமடைந்த சுபஸ்ரீயின் பெற்றோரை நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த ஒரு பேனர் ஒன்று அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ என்கிற பெண் மீது விழுந்தது. இதில், அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறி மரணமடைந்தார். இந்த விவகாரம் தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சுபஸ்ரீயின் வீட்டிற்கு நேற்று கமல்ஹாசன் சென்று ஆறுதல் கூறினார். அவர்களிடம் சிறிது நேரம் பேசிவிட்டு வெளியே வந்த கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் ‘இது ஈடு செய்ய முடியாத இழப்பு. என்ன சொல்லி அவர்களுக்கு ஆறுதல் சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை. அவர்களின் சோகம் கோபமாக மாறும்படி யாரும் எதுவும் கூற வேண்டாம் என்பதுதான் என் வேண்டுகோள்.

எங்கள் மீது குற்றமில்லை என சுட்டுக்காட்டுவதில் அமைச்சர்கள் தீவிரமாக உள்ளனர். வெந்த புண்ணில் வேலை பாய்ச்ச வேண்டாம். இனியாவது திருத்திக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு நாடகம் போட்டு பேனர்களை அகற்றுங்கள் எனக்கூறுவதை விட்டுவிட்டு இனி இந்த கலாச்சாரத்தையே ஒழிக்க வேண்டும். ஒழியவில்லை எனில் மக்கள் ஒழிப்பார்கள். அதற்கு மக்கள் நீதி மய்யமும் துணை நிற்கும். சினிமாக்காரர்களும் பேனர் வைக்கக் கூடாது. குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும்’ என அவர் கூறினார்.

பாருங்க:  சுபஸ்ரீ மரணம் - பார்த்திபன் வெளியிட்ட உருக்கமான வீடியோ