cinema news
படம் ஆச்சு ஹிட்டு!…அதனால தான் சுந்தருக்கு கிடைச்சது சீட்டு!…கமல் கணிப்பு தப்பா போகுமா?
.”அரண்மனை- 4″ ரிலீஸான உற்சாகத்தில் இருக்கிறாராம் சுந்தர் சி. கமல்ஹாசனை வைத்து இவர் இயக்கிய “அன்பே சிவம்” படம் வசூலில் மிகப்பெரிய சாதனையை படைக்காவிட்டாலும், இவருக்கு ஒரு தனி பெயரை வாங்கிக் கொடுத்தது தமிழ் சினிமாவில்.
படம் ஷூட்டிங் முடிந்த பின்னர் கமல்ஹாசன் சுந்தர்.சியை அழைத்து நல்லதை செய்து இருக்கிறீர்கள் அதனால் நிச்சயமாக நல்லதே நடக்கும் என சொல்லி இருந்திருக்கிறார்.
தனது மகளினுடைய கல்விக்காக ஒரு பள்ளிக்கு சீட்டு கேட்க சென்று இருக்கிறார் சுந்தர்.சி. நிர்வாகத்தினரோ சுந்தர்.சியை பார்த்து இப்ப வந்து அட்மிஷன் போட வந்திருக்கிறீர்களே?, உங்க மகளுக்கு சீட்டு கிடைப்பதற்கு வாய்ப்பு ரொம்ப கம்மிதான். எதுக்கும் பள்ளி ப்ரின்ஸ்பாலை நீங்க வெயிட் பண்ணி பாருங்க என சொல்லி இருக்கிறார்கள்.
காத்திருந்து பள்ளி முதல்வர் வந்த பின்னர் அவரை சந்தித்திருக்கிறார். அவர் இந்தியராம் போல. சுந்தர்.சியை பார்த்து என்ன வேலை பார்கின்றீர்கள் எனக்கேட்க, சினிமாவில் பணியாற்றுவதாக சொல்லியிருக்கிறார். அதனால் சினிமா குறித்த பேச்சுக்கள் வரத் துவங்கியதாம்.
பள்ளி முதல்வர் ஒரு ஹிந்தி படத்தை குறிப்பிட்டு, தமிழ் சினிமாவில் ஏன் இது போல படங்களை அதிகமாக கொடுப்பதில்லை எனக் கேட்டுள்ளார். சமீபத்தில் தமிழ் சினிமாவில் நான் பார்த்த ஒரு நல்ல தரமான படம் என்றால் அது “அன்பே சிவம்” என சொல்லி இருக்கிறார் பள்ளி முதல்வர்.
அருகில் இருந்த குஷ்பூ பள்ளி முதல்வரிடம் அந்த படத்தை இயக்கியதே இவர் தான் என சுந்தர்.சியை பார்த்து கைகாட்டியுள்ளார். உடனே பள்ளி முதல்வர் முதல்வர் “அன்பே சிவம்” படம் இயக்குனரா நீங்க?, அப்போ உங்க பொண்ணுக்கு சீட்டு இல்லைன்னு சொல்லுவோமா? என சொல்லி உடனே சீட்டு கொடுத்தார்களாம்.
“அன்பே சிவம்”படம் குறித்து கமல்ஹாசன் சொன்னது போல நல்லது செய்ததால் நல்லது நடந்ததாக இந்த சம்பவத்தினை சுட்டிக்காட்டி பெருமை பொங்க கூறியிருப்பார் சுந்தர்.சி.