cinema news
கமலுக்கு வில்லனாக ராகவா லாரன்ஸா
மாஸ்டர் படத்தை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கியுள்ளார். படத்தின் அறிமுக டீசர் மட்டுமே வந்துள்ளது வேறு எதுவும் இப்படத்தை பற்றிய அப்டேட் வராமல் இருந்தது.
தற்போது புதிய அப்டேட் ஆக ராகவா லாரன்ஸ் இப்படத்தில் கமலுக்கு வில்லனாக நடிப்பதாக தகவல் வந்துள்ளது.
இதில் நடிப்பதற்கு லாரன்ஸ் ஆர்வம் காட்டிவருகிறார். ஆகையால், விரைவில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் எனத் தெரிகிறது.
தர்பார்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் லாரன்ஸ் பேசியபோது, தன்னுடைய சிறு வயதில் கமல் பட போஸ்டர் மீது சாணி அடித்ததாகக் குறிப்பிட்டார். இதனால் பெரும் சர்ச்சை உருவானது. இது தொடர்பாக கமல் ரசிகர்கள் லாரன்ஸைக் கடுமையாக விமர்சித்தனர். அப்போது கமலைச் சந்தித்து தனது பேச்சு தொடர்பாக லாரன்ஸ் விளக்கம் அளித்திருந்தது நினைவுகூரத்தக்கது.