Latest News
ரஜினியை ரீப்ளேஸ் பண்ணப்போகும் கமல்?…கலக்கல் கம்-போவாகத் தான் இருக்கப்போகுது!…
ரஜினியும், கமல்ஹாசனும் திரை உலகில் மாத்திரம் அல்ல நிஜ வாழ்விலும் நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றனர். இவர்கள் இருவரின் நட்பு பல நேரங்களில் பலரையும் பொறாமையை உண்டுபண்ணும் அளவில் இருந்து வருகிறது.
ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் இணைந்தே தான் பல படங்களில் நடித்து வந்தனர். பின்னர் இருவரும் மனமொத்து தான் தனித்தனியாக நடிக்கவும் துவங்கினர்.ரஜினி இப்போது “வேட்டையன்” படத்தில் நடித்து வருகிறார்.
விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினி நடிக்க உள்ள மற்றொரு படமான “கூலி” படத்தின் ஷூட்டிங் இன்று துவங்கியுள்ளது. கமல்ஹாசன் மணிரத்னத்தோடு பல ஆண்டுகள் கழித்து “தக் – லைஃப்” படத்தில் இணைந்திருக்கிறார்.
ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்து இன்று இந்தியா முழுவதுமே பிரபலமான இயக்குனராக மாறி இருப்பவர் அட்லீ. ஷாருக்கானை வைத்து இவர் இயக்கிய “ஜவான்” படம் படைத்த வசூல் சாதனை இவரை வேற லெவலுக்கு கொண்டு சென்றது. அட்லீ மீண்டும் பாலிவுட்டிலே தான் தனது அடுத்த படத்தை இயக்கப்போகிறார்.
சல்மான்கானை ஹீரோவாக வைத்து தனது புதிய படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறார் அட்லீ. இ ந் நிலையில் இந்த படத்தில் ரஜினி நடிக்கப்போகிறார் என்ற செய்தி காட்டுத் தீயாய் பரவியது.
ஆனால் அது வெறும் வதந்தி தான் என தெரிய வந்தது. இப்போது ரஜினி இடத்தில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக புது தகவல் ஒன்று கசிந்துள்ளது.இதில் உண்மைதன்மை இருக்கக்கூடும் என பிரபல திரை விமர்சகர் ‘வலைப்பேச்சு’ அந்தணன் சொல்லியிருக்கிறார்.
காரணம் கமல் மகேந்திரனுடன் இருப்பது. அட்லீ – மகேந்திரன் இருவருக்கும் இடையேயான உறவு உலகறிந்ததே. இதனால் கூட அட்லீ படத்தில் கமல் இணைய இருப்பதாக வந்துள்ள செய்தியில் உண்மை இருக்கலாம் என அந்தணன் சொல்லியிருக்கிறார்.
“இந்தியன் – 2” பட ரிலீஸ் தேதி நெருங்கி வருவகிறது. கமலின் முழு கவனமும் “தக் – லைஃப்” படத்திலேயே இருப்பதால் அட்லீ – சல்மான்கான் – கமல் காம்போ பற்றிய அதிகாரப்பூர்வமான தகவல் வந்தால் அது நிச்சயம் மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாகத்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.