பிரபாஸ் “பாகுபலி” படத்திற்கு பிறகு இந்தியாவின் ஃபேவரைட் ஸ்டாராகி விட்டார். நம்பமுடியாத விஷயங்களை கூட தனது பிரம்மாண்ட காட்சியமைப்பால் படம் பார்த்தவர்களை சீட்டின் நுனிக்கே வரவழைத்திருந்தார் இயக்குனர் ராஜமெளலி. படத்தின் இரண்டாம் பாகம் கூட முதல் பாகத்தை போலவே தான் பிரம்மிக்க வைத்தது.
“பாகுபலி” போன்ற ஒரு எதிர்பார்ப்பை தான் தந்துள்ளது கல்கி 2898 AD படத்தின் டிரையலர். கற்காலத்தில் இருப்பது போன்ற காட்சியோடு தான் துவங்குகிறது டிரையலரின் முதல் நொடிகள். அப்படியே டைம் மிஷீனில் டிராவல் செய்து அதி நவீன உலகத்திற்கு வந்தடைகிறது.

பிரபாஸ் “பாகுபலி”யின் போட்டிருந்த அதே உடைகளில் வருகிறார். படத்தில் என்ன தான் இருக்கிறது என்ற ஆவலை தூண்டிவிட்டுள்ளார் இயக்குனர் நாக் அஷ்வின். அமிதாப் பச்சன் வேற இருக்கிறாராம் படத்தில், பேன் இந்தியா மூவி இது என்பதால் எல்லா மொழி ரசிகர்களுக்கும் கொண்டாட்டம் தான் படம் வந்த பிறகு.
தீபிகா படுகோனே தான் ஹீரோயின். இளசுகளுக்கு நிச்சயம் ட்ரீட் இருக்கத்தான் போகிறது என்றும் நம்பலாம். நேற்று வெளியான டிரையலரை பார்க்கும் போது “ஏழாம் அறிவு” படத்தின் சாயல் ஆங்காங்கே தென்பருகிறது.
“பாகுபலி”யையும்நினைவில் வரவைக்கிறது சில விஷயங்கள். இதை எல்லாவற்றையும் விட கமல்ஹாசன் நடித்திருக்கிறார். தமிழ் ரசிகர்களின் முக்கியத்துவம் இந்த படத்திற்கு வழங்கப்பட இதுவுமே ஒரு முக்கிய காரணமாக சொல்ல்பபடுகிறது.
இவருக்கு நெகட்டிவ் ரோல் தான் என சொல்லப்பட்டாலும். அவரின் நடிப்பு அதில் எப்படி இருக்கும் என யூகங்கள் கிளம்பிவிட்டது. எத்தனை படங்கள் ரீலீஸ் பட்டியலில் காத்திருந்தாலும் “கல்கி 2898 AD”க்கு எல்லாவற்றையும் விட அதிகமான எதிர்பார்ப்புகள் இருக்கத்தானே செய்யும் காரணம் அதில் நடித்திருக்கின்ற கலைஞர்களின் பெயர் பட்டியலை பார்க்கும் போது.