ஸ்டுடென்ட் நம்பர் 1 என்ற தெலுங்கு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் நடித்து மிகப்பெரிய வசூல் வேட்டை குவித்தது. இதுவே ஜூனியர் என்டிஆர்ருக்கும் முதல் வெற்றிப் படமாகும். அதனைத்தொடர்ந்து இயக்குனர் ராஜமௌலி பல்வேறு தெலுங்கு சினிமாக்களை இயக்கினார். அனைத்துமே பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது என்றே கூறலாம்.
இவர் நான் ஈ என்ற திரைப்படத்தை நேரடியாக தமிழிலும் தெலுங்கிலும் இயக்கி, அந்த படம் இரண்டு மொழிகளிலுமே நல்ல ஹிட்டடித்தது. ஆனால் இவரை உலகம் முழுவதும் பிரபலம் அடையச்செய்தது பாகுபலி என்ற பிரம்மாண்ட திரைப்படம் தான். இந்த படம் அனைத்து மொழிகளிலும் வெளியானது.
இந்த படத்திற்கு பிறகு இயக்குனர் ராஜமௌலி ஆர்ஆர்ஆர்(RRR) என்ற படத்தை இயக்கவுள்ளார். இதில் தெலுங்கு மெகா ஹிட் ஸ்டார்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தை சுமார் ஐந்து மொழிகளில் நேரிடையாக எடுக்கப்படுகின்றது. இந்த படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளை சேர்ந்த சுதந்திர வீரர்கள் பற்றிய கதையம்சம் கொண்டது. இந்த படத்தை ஐந்து மொழிகளில் எடுக்க உள்ளதால் இந்தி தெலுங்கு தமிழ் மலையாளம் கன்னடம் என்ற ஐந்து மொழி ரசிகர்களையும் கவரும் வகையில் கதைக்கு தேவையான கதாபாத்திரங்களை அனைத்து ஜில்லாகளிலிருந்தும் கவரஉள்ளர்.
தெலுங்கை பொருத்தவரை ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களைத் தொடர்ந்து மற்ற கதாபாத்திரங்களை அனைத்து மொழிகளிலிருந்தும் தேர்தெடுக்கப்பட்டனர். இந்தி மொழியிலிருந்து அஜய் தேவ்கன் மற்றும் ஆலியா பாட் தேர்ந்தெடுத்தார்.
அந்த வரிசையில் தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களை கவரும் வகையில் ஜில்லா கூட்டணியான விஜய் மற்றும் மோகன்லால் இவர்களை கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்க உள்ளதாக கூறப்படுகின்றது. இதைப்பற்றி எந்த அதிகாரபூர்வமான தகவல்களையும் படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை.

பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் ஜில்லா கூட்டணிகளை வைத்து எஸ்.எஸ்.ராஜமௌலி ஐந்து ஜில்லாகளையும் தன் வசம் ஈர்ப்பாரான்று?