Connect with us

விவாகரத்தில் விருப்பமில்லை… நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி மீண்டும் அறிக்கை…!

Latest News

விவாகரத்தில் விருப்பமில்லை… நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி மீண்டும் அறிக்கை…!

நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி விவாகரத்து தொடர்பாக மீண்டும் சமூக வலைதள பக்கங்களில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நடிகர் ஜெயம் ரவி. இவரது மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிய போவதாக அறிவித்திருந்தார். கோர்ட்டில் விவாகரத்து வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு பதில் அளித்து ஜெயம் ரவியின் மனைவி கூறியிருந்ததாவது எனது கவனத்திற்கு வராமல் எனது ஒப்புதல் இல்லாமல் ஜெயம் ரவி தன்னிச்சையாக எடுத்த முடிவு என்று பேசி இருந்தார் .

மேலும் ஜெயம் ரவியும் பாடகி கெனிஷா பிரான்சிசும் நெருக்கமாக பழகுவதால் தான் அவரின் மனைவியை பிரிய முடிவு செய்திருப்பதாக சமூக வலைதள பக்கங்களில் தகவல் வெளியானது. இது குறித்து ஜெயம் ரவியும் கெனிஷா பிரான்சிசும் மறுப்பு தெரிவித்திருந்தார்கள். மேலும் ஜெயம் ரவியின் மனைவி குறித்து சமூக வலைதள பக்கங்களில் ஏராளமானோர் ஏகப்பட்ட கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

ஜெயம் ரவியை அவரின் மனைவி ஆர்த்தி சந்தேகப்படுவதாலும் கடந்த இரண்டு வருடங்களாக தன்னை மரியாதை இல்லாமல் நடத்துவதாகவும் பல பிரபலங்கள் கூறி வருகிறார்கள். மேலும் விவாகரத்து விவகாரம் தொடர்பாக ஆர்த்தி ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றார். அந்த அறிக்கையில் நடிகர் ஜெயம் ரவியுடன் விவாகரத்துக்கு விருப்பமில்லை என்றும் தனிப்பட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறேன் என்று ஆர்த்தி கூறி இருக்கின்றார்.

இத்தனை நாள் நான் அமைதியாக இருந்தது என் குற்றவுணர்ச்சி என்றோ? என் பலவீனம் என்றோ? நினைக்க வேண்டாம். திருமணத்தின் புனிதத்தை நான் ஆழமாக மதிக்கின்றேன். யார் பேரையும் புண்படுத்தும் விவாதத்தில் ஈடுபட மாட்டேன். என் கவனம் எங்கள் குடும்பத்தின் நலனின் உள்ளது என்று தெரிவித்திருக்கின்றார். இந்த அறிக்கையானது தற்போதைய இணையத்தில் வைரலாகி வருகின்றது.

More in Latest News

To Top