ஜெயம் ரவியின் 25வது பட டீசர் – இணையத்தில் ட்ரெண்டிங்

ஜெயம் ரவியின் 25வது பட டீசர் – இணையத்தில் ட்ரெண்டிங்

ஜெயம் ரவியின் 25வது படமான பூமி வரும் மே மாதத்தில் திரைக்கு வரவிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த படம் விவசாயத்தின் முக்கியத்துவத்தை கருவாக கொண்டது என்று கூறப்படுகின்றது.

லக்ஷ்மன் இயக்கத்தில் டி.இமான் இசையமைக்க ஹோம் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ளார். இதில் நிதி அகர்வால்(Nidhhi Agerwal) நாயகியாக அறிமுகமாகியுள்ளார். இவர்களுடன் தம்பி ராமையா, சரண்யா பொன்வண்ணன், சதிஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து ஜெயம் ரவி தனது ட்விட்டரியில் பூமி படத்தின் டீசர் விடியோவை வெளியிட்டார். இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தும் உள்ளனர்.

டீசர்ரில் விவசாயத்தின் தற்போதைய நிலையை வேகமாகவும் விறுவிறுப்பாகவும் காணமுடிகின்றது. கோமாளியை தொடர்ந்து கண்டிப்பாக ஜெயம் ரவியின் ஹிட் வரிசையில் பூமிக்கும் இடமுண்டு.