இந்த கொரோனா தொற்று வந்தாலும் வந்தது பலரது பொருளாதாரத்தை கெடுத்து வாழ்க்கையை கெடுத்து, பலரது மகிழ்ச்சியையும் அழித்து கொண்டிருக்கிறது.
இதற்கு திரைப்பட துறையும் விதிவிலக்கல்ல, திரைப்படங்களை பார்ப்பவர்களும் விதிவிலக்கல்ல. தமிழ்நாட்டிலும் மாஸ்டர், சூரரை போற்று போன்ற படங்கள் ரிலீஸ் ஆகி, ரசிகர்கள் தியேட்டர் சென்று பார்க்க முடியாத நிலை இருக்கும்போது இதே நிலை ஹாலிவுட்டிலும் தொடர்கிறது.
ஹாலிவுட் படங்கள் சர்வதேச படங்கள் அல்லவா அதிலும் அந்தக்காலத்தில் இருந்து வந்த ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு சர்வதேச அளவில் ரசிகர்கள் உண்டு.
அப்படியாக ஜேம்ஸ்பாண்ட் பட வரிசையில் 25வது படமாக நோ டைம் டூ டை என்ற படம் கடந்த ஏப்ரலில் ரிலீஸ் ஆக இருந்தது. கொரோனா தொற்றின் காரணமாக அடுத்த ஏப்ரலிதான் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் மட்டும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.