ஹாலிவுட்டின் பிரபல நடிகர் சீன் கேனரி டாக்டர் நம்பர்,ரஷ்யா வித் லவ்,கோல்ட் பிங்கர்,தண்டர் பெல், யூ ஒன்லி லவ் டிவைஸ்,டைமண்ட்ஸ் பார் எவர், நெவர் சே நெவர் எகெய்ன் உள்ளிட்ட ஜேம்ஸ் பாண்ட் படங்களில் இவர் நடித்திருக்கிறார்.
1962முதல் நடித்து கொண்டிருந்தவர் 83ம் ஆண்டு வரை ஜேம்ஸ்பாண்ட் ஆக நடித்து வந்தார். 1988ம் ஆண்டு ஆஸ்கார் விருதையும் வென்றார். ஜேம்ஸ்பாண்ட் பட நடிகர்களில் சீன் கேனரிக்குத்தான் அதிக ரசிகர்கள் உண்டு.
எல்லோராலும் மிகவும் ரசிக்கப்பட்ட சீன் கேனரி நேற்று மரணமடைந்தார் அவருக்கு வயது 90 ஆகும்.