இனிமேல் தான் நடிக்கும் படங்கள் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன் என நடிகர் ஜெய் தெரிவித்துள்ளார்.
இசை வெளியீட்டு விழா, செய்தியாளர்கள் சந்திப்பு என தான் நடிக்கும் எந்த படங்கள் தொடர்பான எந்த நிகழ்ச்சியிலும் நடிகர் ஜெய் கலந்து கொள்வதில்லை. அஜித்தை போலவே இவரும் தன்னை நினைத்துக்கொள்கிறார் என பலரும் கிண்டலடித்தனர். ஆனாலும், அவர் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை.
இந்நிலையில், தற்போது அவர் தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில் “ சில காரணங்களால் எனது படங்கள் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருந்தேன். தயாரிப்பாளர் சுப்பு பஞ்சு என்னை மாற்றிவிட்டார். எனவே, இனிமேல் அனைத்து புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வேன்” என அவர் கூறியுள்ளார்.