இஸ்லாம் மதம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது என்பது குறித்து ராஜ்கிரண்

30

நடிகர் ராஜ்கிரண் முகநூலில் ஆக்டிவாக இருப்பவர். இஸ்லாமிய மதத்தை சார்ந்தவரான இவர் அனைத்து மதத்தின் மீதும் பற்றுதலாக இருப்பவர் அரண்மனைக்கிளி படத்தில் வரும் அம்மன் கோவில் கும்பம் இங்கே பாட்டுக்கு இவர் ஆடிய ஆட்டம் சொல்ல முடியாது.

இவர் இஸ்லாமிய மதத்தின் போதனைகளை நிறைய விசயங்களுக்கு எடுத்துக்காட்டாக கூறுவார். அதில் இஸ்லாம் மதம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகி வருகிறது என ஒரு விளக்கத்தை சொல்லியுள்ளார்.

சமீபத்தில் ஒரு பதிவர் எழுதிய இஸ்லாமிய மதம் குறித்த விசயங்களை தன் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் அதில் கூறி இருப்பதாவது.

நீங்களே புரிந்து கொள்ளலாம்.
ஏன் இஸ்லாம் என்ற கொள்கை
எதிர்ப்புகளைச் சந்திக்கிறது என்று!
தர்மம் பரவும்போது, அதர்மத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள் வெகுண்டெழுகிறார்கள். அநீதி, அக்கிரமம், அடக்குமுறை, கொள்ளை, வட்டி, விபச்சாரம், போதைப்பொருட்கள் போன்றவற்றை ஆதாரமாகக் கொண்டு வயிறு வளர்ப்பவர்களால்,
இஸ்லாத்தின் வளர்ச்சியை சகித்துக்கொள்ள முடிவதில்லை.
இது தங்கள் ஆதிக்கத்தைக் குலைத்துவிடும் என்று,
பாசிச சக்திகளும், வல்லரசு காலனி ஆதிக்க சக்திகளும் அஞ்சுகிறார்கள்.
இறைவனை நேரடியாக பொருட்செலவின்றி அணுக முடியும் என்று மக்கள் உணரும்போது
இடைத்தரகர்களை அது அமைதி இழக்கச் செய்கிறது.
மூடநம்பிக்கைகளை மக்களுக்கு இடையே பரப்பி, அவற்றைக் கொண்டு காலங்காலமாக மக்களைச் சுரண்டி வாழ்பவர்களுக்கு இக்கொள்கை பரவுவது பிடிக்காது.
“சக மனிதன் ஒவ்வொருவனும்
நம் சகோதரனே, நாம் அனைவரும்
சரி சமமே” என்று இஸ்லாம் போதித்து, நடைமுறைப் படுத்துவதால்,
நிறத்தால், இனத்தால், ஜாதியால், மொழியால், மக்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தி, அவர்களை
அடிமைகளாக பாவித்து, ஆதிக்கம் செய்து வாழ்வோருக்கு, இக்கொள்கை பரவுவது பிடிக்க வாய்ப்பில்லை.
மனிதனை, இக்கொள்கை, சுயமரியாதை உணர்வோடு வாழத் தூண்டுவதால், அதன் காரணமாக மக்கள் விழிப்புணர்வு பெற்று ஆதிக்க சக்திகளுக்கு எதிராகத் திரும்புகிறார்கள். அவர்களிடமிருந்து தங்கள் நாடுகளை விடுவிக்கவும் தங்கள் நாட்டுவளங்கள் கொள்ளை போவதைத் தடுக்கவும் போராடுகிறார்கள்.
இவ்வாறு உலகெங்கும் உள்ள அதர்மத்தின் காவலர்களுக்கு இக்கொள்கை வயிற்றில் புளியைக் கரைத்து வருகிறது. எனவேதான் அவர்கள் இம்மார்க்கத்தை பரவ விடாமல் தடுக்க கைகோர்த்துக் கொண்டு செயல்படுகிறார்கள்.
ஆனால் இவ்வுலகின் உரிமையாளனோ, இம்மார்க்கம் அகில உலக மக்களுக்கும் அருட்கொடையாக இறக்கப்பட்ட ஒன்று இதை யாரும் தடுக்க முடியாது என்கிறான், தனது திருமறையில்.
‘தம் வாய்களைக் கொண்டே இறைவனின் ஒளியை (ஊதி)
அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் – ஆனால்
யார் வெறுத்த போதிலும், இறைவன் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான்.’ (அல்-குர்ஆன் 9:32)
பாருங்க:  நடிகர் சூரி வீட்டின் குவாரன்டைன் பரிதாபங்கள்