சமீபத்திய கதாநாயகிகளில் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்து வருபவர் ராஷ்மிகா மந்தனா. தமிழில் சில படங்களில் மட்டுமே தலை காட்டியுள்ள இவர் விஜயுடன் “வாரிசு” படத்தில் நடித்துள்ளார். தனது துள்ளலான நடிப்பினாலும் , உடல் மொழியாளும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவுள்ளார்.
தெலுங்கு ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் இவர், அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்த “புஷ்பா” படம் மெர்சல் ஹிட். தெலுங்கில் மாத்திரமல்ல வெளியான எல்லா மொழிகளிலும் ஒரு ரவுண்டு வந்த படம் அது.

‘ஸ்ரீவள்ளி’ என்ற கதாபாத்திரத்தில் கிராமத்து பெண்ணாக வலம் வந்த ராஷ்மிகாவின் நடிப்பு பெரிதாக பேசப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் அந்த படத்தில் வரும் “வாயா சாமி, போக்கிரி சாமி” என்ற பாடல் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமானது.
“புஷ்பா” படத்தினுடைய இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்பொழுது நடந்து வருகிறது. அல்லு அர்ஜுனின் பிறந்த தினத்தன்று படத்தின் டீஸர் வெளியானது. முதல் பாகத்தில் ராஷ்மிகாவை விரட்டி, விரட்டி காதலிப்பார் அல்லு, துவக்கத்தில் அவரை கண்டாலே ஒதுங்கி, பின்னர் காதல் வயப்பட்டு இருவரும் திருமணம் செய்து கொள்வது போல முதல் பாகம் நிறைவடைந்திருக்கும்.

படத்தின் இரண்டாம் பாகத்திலும் இவர்ளே நடிப்பதால் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. அதே “ஸ்ரீவள்ளி” கதாபத்திரத்திலேயே நடித்து வருகிறார் ராஷ்மிகா. படத்தின் முழு கதையும் தனக்கு தெரியாது. தனது கதாபாத்திரம் குறித்த தகவல் மட்டுமே சொல்லப்பட்டதால் அவருக்கு நடிப்பதில் சிரமம் இருந்ததாம்.
தான் நடித்த காட்சிகளை தவிர வேறு எதுவும் படத்தை பற்றி தெரியாது என கூறியுள்ளார் ராஷ்மிகா. படப்பிடிப்பின் போது நடந்த சில விஷயங்களாலும், டீஸர் வெளியான நேரத்திலும் தான் அதிகமாக “ட்ரோல்” செய்யப்பட்டதாவம் பின்னர் நல்ல வரவேற்பு கிடைத்ததாகவும் சொல்லியிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.