“இந்தியன் -2” படக்கதை இப்போதுள்ள 2கே கிட்ஸிற்கு ஏற்றது போல இருக்குமா? என விமர்சனங்கள் இப்போதே எழத்துவங்கிவிட்டது.ஒரு வேளை இது முதல் பாகத்தினுடைய தொடர்ச்சியாக இருந்துவிட்டால் படத்தை இந்த தலைமுறை எந்த விதத்தில் பார்க்கும் என விவாதமும் துவங்கி விட்டது.
“இந்தியன்” முதல் பாகத்தில் லஞ்சம், ஊழலை எதிர்த்து அதற்காக கொலை செய்யும் தாத்தாவாக நடித்திருந்தார் கமல்ஹாசன். நாட்டின் நலனுக்காக தனது மகனையே கொன்று விடுவார். அந்த அளவு தேச நலனில் அக்கறை கொண்டவராக நடித்திருந்தார் “இந்தியன்” முதல் பாகத்தில்.

“ஜெயிலர்” படத்தில் கூட ரஜினி தனது மகனை இழப்பார் நேர்மை தவறியதற்காக. இது இப்போதைய ரசிகர்களால் ஏற்கப்பட்டு விட்டது. படமும் மெஹா ஹிட் ஆனது. ஆனால் “இந்தியன்” படத்தின் கண்ணோட்டமே வேறு. லாஜிக்கிற்கெல்லாம் அதிக முக்கியத்துவம் கொடுக்காதவர்களாக பார்க்கப்பட்டவர்கள் அந்த கால ரசிகர்கள்.
ஆனால் ஆன்-லைனில் எதையும் முடிக்கும் இன்றைய 2கே கிட்ஸ் தாத்தாவை எப்படி ரசிப்பார்கள் என்பதே இப்போதைய கேள்வி. இந்நிலையில் தான் “இந்தியன்” முதல் பாகம் நாளை ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
அப்பா, மகன் என் இரண்டு வேடங்களில் வேற லெவல் நடிப்பை காட்டியிருந்தார் கமல் முதல் பாகத்தில். சுகன்யா, மனீஷா கொய்ராலா, ஊர்மிளா, கவுண்டமணி, நெடுமுடி வேணு என பலரும் நடித்திருந்தனர் இதில்.
முதலல்ல பழைய தாத்தாவ பாருங்க, அப்புறம் லடஸ்ட் வெர்ஷனான ஆன்ட்ராயிட் தாத்தாவ பார்க்கலாம் என சொல்வது போல தான் இருக்கிறது நாளை “இந்தியன்” முதல் பாகம் ரீ-ரீலீஸ் என்ற அறிவிப்பு.