‘இந்தியன் தாத்தா’ இது தான் கோலிவுட்டின் வைரல் டாக். “இந்தியன்” முதல் பாகம் இன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. ஏற்கனவே இந்தியன் தாத்தாவை 90ஸ் கிட்ஸ் பார்த்து விட்டனர். இருந்தாலும் 2கே கிட்ஸும் பார்க்கட்டும் என்று தான் முதல் பாகம் வெளியிடபட்டிருக்கும்.
“இந்தியன் – 2” கதை நிச்சயமாக தாத்தாவை சுற்றித்தான் இருக்கப்போகிறது போல. எங்கு பார்த்தாலும் தாத்தாவை பற்றிய பேச்சு தான். அரசியல் மீம்ஸுகளில் கூட தாத்தாவின் ரெஃபரன்ஸ் இருந்து வருகிறது. இது ஆன்ட்ராய்ட் காலம் என்பதால் தாத்தாவை மிக ஸ்டைலாகத்தான் உருவாக்கியிருப்பார் இயக்குனர் ஷங்கர்.
சீரியஸான சப்ஜெக்டான “இந்தியன்” பட முதல் பாகத்திற்கும் இரண்டாவது பாகத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும் என்பதை பாடல்களில் கூட ஷங்கர் காட்டியிருக்கிறார். அனீருத் பாடிய ‘தாத்தா வராரு’ பாட்டு இப்போதே ஒலிக்கத்துவங்கி விட்டது எல்லா இடங்களிலும்.

சித்தார்த் டான்ஸ் ஆடியிருப்பது போல சில நிமிடங்களுக்கு முன்னர் வெளியாகி இருக்கிறது ‘தாத்தா வராரு’ பாடலின் லிரிக்கல் வீடியோ. தர லோக்கல் ஸ்டெப்புகளை போட்டு ஆடியிருப்பதை வெளியாகி உள்ள லிரிக்கல் வீடியோவின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது .இதனால் படத்தில் இந்த பாடலுக்கு ஆடப்போவது அவராகத்தான் இருக்கும் என்ற குழப்பம் அதிகரிக்க துவங்கியுள்ளது.
‘தாத்தா வராறே, கதற விட போறாரு, பதற விட போறாரு, ஒலற விடபோறாரு – பாட்டி’ என அனீரூத்தின் வழக்கமான ட்ரென்டி இசையின் பின்னனியில் பாடல் ஒலிக்கிறது. அப்படி பாட்டிகளுக்கு என்ன மெசேஜைத்தான் சித்தார்த் சொல்ல போகிறார் என்பது படம் வெளியாகும் போது தெரிந்துவிடும்.