கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.
லைக்கா தயாரிப்பில் ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு வேகவேகமாக தொடங்கியது. ஆனால், கமல்ஹாசனின் மேக்கப்பில் ஷங்கருக்கு திருப்தி இல்லாததால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பின் கமல்ஹாசனும் தனது அரசியல் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், தற்போது அமெரிக்க மேக்கப் கலைஞர்களின் உதவியுடன் கமலுக்கு மீண்டும் மேக்கப் டெஸ்ட் எடுத்து பார்த்ததில் ஷங்கர் திருப்தி அடைந்துள்ளாராம். எனவெ, மீண்டும் இந்தியன் 2 படப்பிடிப்பு துவங்கியுள்ளது. 3 மாதம் தொடர்ச்சியாக படப்பிடிப்பை நடித்த ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.