cinema news
அஜீத் விஜய்க்கெல்லாம் மெட்டு போட முடியாதாம்…கராரா சொன்ன இளையராஜா!…
தலைமுறைகளை தாண்டி இசை அமைத்து வருகிறார் இளையராஜா. “அன்னக்கிளி” படத்தில் துவங்கிய இவரது இசை பயணம் இன்று வரை பல தடைகளை கடந்தும் வெற்றி நடை போட்டு வருகிறது…
ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருக்கும் இவர் இசை அமைத்த பாடல்களுக்கும், பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக அமைந்தது…
அஜித்,விஜய்,சூர்யா,விக்ரமிற்கும் இவர் இசையமைத்தும் உள்ளார்.கே.பாலச்சந்தர் இயக்கத்தில் சிவக்குமார், சுஹாசினி நடித்து வெளியான படம் “சிந்து பைரவி”.
முழுக்க, முழுக்க கர்நாடக இசையை பின்பற்றியே பாடல்களுக்கான மெட்டுக்கள் அமைக்கப்பட்டிருக்கும். இசைக்கலைஞராக சிவக்குமார் நடித்திருந்தார்.
படத்தில் வரும் “மரி,மரி நின்னேன்” பாடலைப் பற்றி ஒரு மேடையில் பேசும்பொழுது இந்த மாதிரி பாட்டு எல்லாம் எல்லாருக்கும் போட்டுவிட முடியாது.
எல்லாமே சரியாக அமைந்தால் மட்டுமே இது போன்ற பாடல்களை கொடுக்க முடியும் என சொல்லி அதனைப் போல ‘மலர்ந்தும் மலராத பாதி மலர் போல’ என “பாசமலர்” படத்தில் வரும் பாடலை மேற்கோள் காட்டி பேசியிருப்பார்.
காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள் இவை எல்லாம் என்றும், இது போன்ற பாடல்கள் எல்லாம் இனிமேல் எப்படி அமையப்போகிறது என தனக்குத் தெரியாது என்று சொல்லி இருந்தார். இசை தற்போழுது வேறு பரிமானத்தை நோக்கி சென்றுள்ளது.
அதனால் காலத்திற்கு ஏற்றது போலவே மாறியகவேண்டும் என்பது போல சொல்லியிருந்தார். இது போன்ற மெட்டுக்களையெல்லாம் அஜீத்திற்கோ, விஜய்க்கு கொடுத்தால் எடுபடாது.
எல்லாவற்றையும் மீறி இது போல படல்களை கொடுத்தால் எழுந்து சென்று விடுவார்கள் ரசிகர்கள் என்றும் சொல்லியிருப்பார் பேசும்போது….