ilayaraja spb
ilayaraja spb

மெட்டு இல்லேன்னா பாட்டு கிடையாது!…எஸ்.பி.பியிடம் அப்பவே பிடிவாதமாக சொன்ன இளையராஜா?…

இளையராஜா என்றால் சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது. அவர் ஏதாவது ஒன்று பேச, அதை வேறு விதமாக புரிந்து கொண்டு, விவாத பொருளாக மாற்றி அதை வைத்து பலர் கண்டன்டுகளாக கன்வெர்ட் பண்ணி விடுவார்கள். இது தொடர் கதையாக நடந்து வருகிறது பல நேரங்களில் தமிழ் திரை உலகில்.

ரஜினி “கூலி”யில் ‘டிஸ்கோ, டிஸ்கோ’பாடலை தன்னிடம் கேட்காமல் வைத்து விட்டார்கள் என இளையராஜா கொடுத்த பிராதின் சூடு குறைவதற்குள்ளேயே, பாடல் வெற்றி பெற காரணம் இசையா? அல்லது பாட்டின் வரிகளா? என்ற பஞ்சாயத்து துவங்கி உள்ளது.

சில ஆண்டுகளுக்கு இளையராஜாவிடம் இதே கேள்வியை கேட்டிருக்கிறார் எஸ்.பி.பாலசுப்பிரமணியன். அதற்கு இளையராஜா சந்தம் இருந்தால் தான் வரிகள் வரும் வரிகள் இருந்தால் தான் பாடல் கிடைக்கும்.

spb ilayaraja
spb ilayaraja

என்ன தான் பாடல் வரிகள் ஆக்ரோஷமாகவோ, சரியாகவோ அமைந்திருந்தாலும் அதற்கான இசை சரியாக இருந்தால் தான் அது வெற்றி பெறும் என சொல்லி இருந்திருக்கிறார். இது தனது கருத்து அல்ல ஒரு முறை கண்ணதாசனிடம் இதே கேள்வியை இளையராஜா கேட்க எஸ்.பி.பி.யிடம் அவர் சொல்லியதை தான், கண்ணதாசன் தனது  கேள்விக்கு பதிலாக சொன்னதாக சொல்லியிருந்தார்.

ஒரு இதற்கு உதாரணமாக எஸ்.பி.பியை பார்த்து ஒரு டெய்லரிடம் போய் சட்டை தைக்க சென்னால் நமது அளவிற்கு தான் அவர் தைத்து தர வேண்டும். அதை விட்டு விட்டு நான் தைத்துக் கொடுக்கும் சட்டையைத்தான் நீங்கள் அணிய வேண்டும் என்று சொன்னால் அது ஏற்புடையதாக இருக்காது அல்லவா?. அது போல தான் வரிகளால் தான் பாடல் வெற்றி பெற்றது என சொன்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என விவாதித்திருக்கிறார் பல ஆண்டுகளுக்கு முன்னரே.