Connect with us

தம்பி மயில்வாகனம் கதவ இழுத்து மூடு…வீரம் பட அஜீத் பாணியில் சம்பவம் செய்த ஹீரோவின் அப்பா…

veeram

Latest News

தம்பி மயில்வாகனம் கதவ இழுத்து மூடு…வீரம் பட அஜீத் பாணியில் சம்பவம் செய்த ஹீரோவின் அப்பா…

“சிறுத்தை” சிவா இயக்கத்தில் அஜீத், சந்தானம், விதார்த், தமன்னா நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன படம் “வீரம்”. படத்தில் அஜீத் தன்னை அழிக்க நினைப்பவர்களுக்கு தனது வீட்டில் வயிறு நிறைய சாப்பாடு போட்டுவிட்டு அவர்களை அடித்து தும்சம் செய்வார். அப்போது ‘தம்பி மயில்வாகனம் கதவ இழுத்து மூடு’ என வசனம் பேசியிருப்பார். இந்த சீன் படத்தில் குறிப்பிடும் படியாக அமைந்தது.

காமெடி நடிகராக அறிமுகமாகி “விடுதலை”படத்தில் ஹீரோவாக மாறியவர் சூரி. அவர் கதாநாயகனாக நடித்துள்ள “கருடன்” படம் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. “வெண்ணிலா கபடிகுழு” படம் தான் சூரியின் முகத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்து ரசிக்கும் படி அமைத்து கொடுத்தது முதன் முதலில்.

மதுரை திரையரங்கு ஒன்றில் படம் வெளியாகி ஓடிக்கொண்டிருந்த நேரத்தில் சூரியின் அப்பா முத்துசாமி தனது நணபர்கள், உறவினர்களை படம் பார்க்க லாரியில் அழைத்து சென்றுள்ளாராம்.

soori father

soori father

சூரி வரும் காட்சிகளில் எல்லாம் வந்துட்டாரு ஹீரோ என பெருமையாக சொல்லி ரசித்தாராம். படம் பார்க்க வந்தவர்கள் சூரி காமெடியன் தானே?,  நீங்க ஹீரோன்னு சொல்றீங்களேன்னு கேட்ட போது எனக்கு என் மகன் தான் ஹீரோ என சொல்லியிருக்கிறார்.

படம் முடிந்ததும் அனைவருக்கும் உயர்தர சாப்பாட்டை பரிமாறுவாராம். எல்லோரும் சாப்பிட்ட பின் வாங்க எல்லாரும் படம் பாக்க போகலாம்ன்னு சொல்லி அதே லாரியில் ஏற்றிக்கொண்டு மீண்டும் தியேட்டருக்கே கூட்டி வந்து விடுவாராம்.

“வீரம்” படத்தில் அஜீத் கதவை இழுத்து பூட்டுவது போல தியேட்டர் கதவை மூடிவிடுவாராம் சூரியின் அப்பா முத்துசாமி.  நிஜ வாழ்வில் தனக்கு பிடித்த ஹீரோ தன் அப்பாதான் என சொல்லும் போது இந்த சுவாரசிய சம்பவத்தை பற்றி சொல்லியிருந்தார் முன்னாள் காமெடியனும், தற்போதைய ஹீரோவுமான சூரி.

More in Latest News

To Top