ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் நிகிதா என்ற பெண்ணை தவ்ஃபீக்கான் என்ற வாலிபர் சுட்டுக்கொன்றதால் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ ஒருவரின் உறவினரான அவர் நிகிதா தோமர் என்ற மாணவியை ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார்.
தன் மதத்திற்கு மாறி தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியுள்ளார் அதற்கு இணங்காத அந்த கல்லூரி மாணவியை அவர் நடுரோட்டில் சுட்டுக்கொலை செய்துள்ளார்.
தன் நண்பர் ரேகான் என்பவரின் உதவியுடன் இந்த கொடூரத்தை அரங்கேற்றியுள்ளார் அவர். இரண்டுஆண்டுகளுக்கு முன்பே நிகிதாவை துன்புறுத்திய வழக்கில் பஞ்சாயத்து வைத்து சமாதானம் பேசப்பட்டுள்ளது.
இந்த கொடூரத்தில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.