cinema news
மனசு அலையபாயுதேன்னு சொல்ல வைச்ச மாதவனுக்கு பிறந்த நாள் இன்னைக்கு…
கோடம்பாக்கத்தில் சமீபத்தில் சர்ச்சையை கிளப்பிய சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் ஹீரோவாக நடிக்க வேண்டிய படம் “அலைபாயுதே”. கடைசி நிமிடத்தில் மணிரத்னம் முடிவை மாற்றியதால் ஹீரோவானார் மாதவன். சாக்லேட் பாய், க்யூடி என பெண் ரசிகைகளால் ரசிக்கப்பட்டவர் இவர்.
ஷாலினியுடன் இவர் நடித்த “அலைபாயுதே” படம் சூப்பர் ஹிட் ஆனது ஒரு பக்கமிருந்தாலும், மாதவன் இந்த படத்தின் மூலம் தனக்கான அஸ்திவாரத்தை தமிழ் சினிமாவில் போட்டுவிட்டார் என்றே தான் சொல்ல வேண்டும்.
அடுத்தது “மின்னலே” லவ்வர்-பாயாக இந்த படத்தில் இவரின் அழகில் மயங்கி தியேட்டரை நோக்கி படையெடுக்கத்துடங்கிவிட்டனர் இவரின் ரசிகர்கள். ஜோதிகாவுடன் “டும்…டும்..டும்…”படத்தில் நடித்த இவருக்கு பாராட்டுக்கள் குவிந்தது. இவரின் வெற்றிப்படங்களில் முக்கியமான ஒன்றாக இருப்பது சரண் இயக்கிய “ஜே,ஜே”.
காதலை வித்தியாசமாக சொல்லிய படம் அது. படத்தின் பாடல்களும் ஹிட் ஆக மாதவனை கோலிவுட்டில் முன்னனி ஹீரோக்கள் பட்டியலில் இணைய வைத்தது என்று கூட சொல்லலாம் ஜே.ஜே.வை. கமல்ஹாசனுடன் அடுத்தடுத்து இரண்டு படங்கள் “நளதமயந்தி”, “அன்பே சிவம்”. இதில் “அன்பே சிவம்”ல் கமலுடன் போட்டி போட்டிருப்பார் நடிப்பில்.
இருவருனுடைய பாப்புலாரிட்டியை அதிகரிக்க வைத்தது “அன்பே சிவம்”. நீண்ட நாட்களுக்கு பிறகு “இறுதிச்சுற்று” படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடிக்க படமோ எதிர்பார்த்ததைவிட அதிகமான வெற்றியை பெற்றது.
இப்போது படவாய்ப்புகள் குறைவாகவே இருந்தாலும் சில வருடங்களுக்கு முன்னர் ரசிகர்களை கிறங்கடித்தவர் இவர் என்று தான் சொல்ல வேண்டும். மாதவன் தனது 54வது பிறந்த தினத்தை இன்று கொண்டாடுகிறார். இவரின் லட்சக்கணக்கான ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்திவந்த வண்ணமே உள்ளனர்.