darling
darling

டார்லிங் நடிகருக்கு பிறந்த நாள் இன்று…வாழ்த்துக்களை குவித்து வரும் ரசிகர்கள்!…

 

ஜீ.வி.பிரகாஷ் குமார் இளம் வயதிலேயே தமிழ் சினிமாவில் நடித்தவர். “ஜென்டில்மேன்” படத்தில் ‘சிக்கு புக்கு ரயிலே’ பாடலை ஒரு சிறுவன் தான் பாடி ஆரம்பித்து வைப்பான். அந்த சிறுவன் வேறு யாருமில்லை ஜீ.வி.யேதான்.

சில நொடிகள் மட்டுமே வந்திருந்தாலும் தனது முதல் திரை அனுபவத்தை இந்த படத்தில் தான் பார்த்தார் இவர். இசையமைப்பாளராக சில ஆண்டுகள் கழித்து தமிழ் சினிமாவிவில் மீண்டும் காலடி எடுத்து வைத்தார். மென்மையான இவரது பாடல்கள் 2கே கிட்ஸை கவர்ந்திழுத்தது.

வைப் சாங்களும் இவருக்கு கை வந்த கலை தான். இன்று இருக்கும் இளம் இசையமைப்பாளர்களில் இவருக்கென ஒரு தனி ரசிகர்கள் படையே இருக்கத்தான் செய்கிறது. தனது காதல் மனைவியான சைந்தவியை பிரிவதாக சமீபத்தில் தான் அறிவித்தார்.

கையில் தற்போது அதிகமான படங்களை வைத்திருக்கும் இசையமைப்பாளர் இவராக கூட இருப்பார். பா.ரஞ்சித் இயக்கி வரும் “தங்கலான்”, சிவகார்த்திகேயனின் “அமரன்”, “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இந்த படங்களுக்கெல்லாம் இசை ஜீ.வி.தான் அமைத்துள்ளார்.

g.v
g.v

ஏ.ஆர்.ரகுமானின் நெருங்கிய உறவினரான இவர் இசையமைப்பளர் என்பதையும் தாண்டி சினிமாவில் கதாநாயகனாவும் நடித்து வருகிறார். “டார்லிங்”, “சிவப்பு மஞ்சள் பச்சை”, “திரிஷா இல்லேன்னா நயன்தாரா” படங்களின் ஹீரோ இவர் தான்.

ரசிகர்களின் அபிமான கலைஞராக இருந்து வரும் ஜீ.வி.பிரகாஷ் இன்று தனது 37வது பிறந்த தினத்தை கொண்டாடி வருகிறார். ரசிகர்களின் வாழ்த்து மழையோடு இவரது பிறந்த தின கொண்டாட்டங்கள் நடந்து வருகிறதாம்.