Connect with us

ராஜாதி ராஜாவின் ஜோடி ராதாவுக்கு பிறந்த நாள் இன்று…

radha

cinema news

ராஜாதி ராஜாவின் ஜோடி ராதாவுக்கு பிறந்த நாள் இன்று…

ராதா, அம்பிகா இருவரும் சகோதரிகள். இந்த இரு கதா நாயகிகளின் பிடியில் தான் 80களில் தமிழ் சினிமா இருந்தது என்று கூட சொல்லலாம். ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், பிரபு என எல்லோருக்கும் ஜோடியாக நடித்து கலக்கியவர்கள் இவர்கள்.

பராதிராஜாவின் “அலைகள் ஓய்வதில்லை” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராதா. கார்த்திக்கும் இந்த படத்தின் மூலம் தான் அறிமுகமானார். கதா நாயகன் கார்த்தியுடன் காதல், இருவரின் காதலுக்கு தடையாய் மதம். இப்படி முதல் படத்திலேயே அழுத்தமான கதை. உச்சத்திலிருந்த இயக்குனரின் படம் என ஆரம்பமே அமர்க்களமானது ராதாவுக்கு.

 

அம்பிகாவிட சற்று உயரம் அதிகாமனவராய் இருப்பார் ராதா. இவரது கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களை கிறங்கடித்தார். அதே நேரத்தில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களிலும் வெளுத்து வாங்கியிருப்பார் இவர். ரஜினியுடன் “ராஜாதி ராஜா”. இரட்டை வேடம் ஏற்று ரஜினி நடித்துப் இந்த படத்தில் வெளி  நாடுசென்று திரும்பும் ராஜா ரஜினிக்கு ஜோடியாக நடித்தார்.

radha kamal

radha kamal

 

கமலுடன் “தூங்காதே தம்பி தூங்காதே”, “காதல் பரிசு” படங்களில் நடித்தார். திரையில் கமல்-ராதாவின் இணை  கமல்-ஸ்ரீதேவிக்கு பிறகு அதிகமாக ரசிக்கப்பட்டது.

காதல் பரிசு படத்தில் ராதாவின் சகோதரி அம்பிகாவும் நடித்திருப்பார். ஃபளாஷ் பேக்கில் கமலுடனான காதலை சொல்லியிருப்பார் இயக்குனர்.

விஜயகாந்துடன் “அம்மன் கோவில் கிழக்காலே”, சத்யராஜுடன் “அண்ணாநகர் முதல் தெரு”, பிரபுவுடன் “ஆனந்த்” என தனது கவர்ச்சி கலந்த துடுக்குத்தனமான நடிப்பால் மகிழவைத்த ராதாவின் பிறந்த தினம் இன்று. தனது 59வது வயதில் அடியெடுத்து வைக்கும் ராதாவை வாழ்த்து மழையில் நனைய வைத்து வருகின்றார்கள் அவரின் ரசிகர்கள்.

 

More in cinema news

To Top